தழுவு தழுவு என்றே, அந்தக்கொடி,
தாகத்தில் ஆடிட்டதோ?
விலகு விலகு என்றே வந்தத் தென்றல்,
நழுவியே ஓடிட்டதோ?
தழுவி நழுவியதே...
தழுவ வந்த தென்றல்!
அதைக்கண்டு...
அவள்: என் வாழ்வினிலே ஏதோ ஒரு குறை!
அவன்: நிலவல்லவோ நீயே அதை மறை!
என், கண்ணே! நானே உன்றன் சிறை!
கண்ணல்லவோ கண்ணே! பூவாய் நகை!
கடலுக்குள் கரிப்பிருக்கு;
காதலுக்குள் கவலை இருக்கு!
நிலவுக்குள் தழும்பு இருக்கு
உள்ளத்தில் ஊனம் எதற்கு!
கடலுக்குள் முத்தும் இருக்கு
கவிதைக்குள் காதல் இருக்கு
நிலவுக்குள் ஒளி! இருக்கு
இதையத்தில் இருட்டை விரட்டு!
உடலுக்குள் மயக்கம் இருக்கு
உள்ளத்தில் தயக்கம் இருக்கு!
உடலுக்குள் உறுதி இருக்கு
உள்ளத்தில் மறதி இருக்கு!
பனிவிழும் இரவு, பூஇதழ்விரி கொடியே!
பசிதினம் அகல, கனி...இனி... அடியே!
(2)
என்ன ரசனையோ இது!
திமிர்நோக்கால் மெல்லச் சிறைஎடுத்து என்னை
உமிழும் எழிலுக்குள் உய்!என்றே சாய்த்து,
சிமிட்டும் இமைமொழிக்குள் தீயைத் தெளித்து...
அமிழ்தம் தரவே... அனைத்தும் என்றாள்;
குமுதமலர் மொட்டை குவலயமாய்க் காட்டி,
அமிழ்த்துகிறாள் அன்போ? திமிர்!
வான்வழி தாக்கும் நிலவொளிப் பார்த்து,
தேன்எனச் சொட்டிட தின்எனக் கடிக்கும்,
மீன்விழி கண்டு மின்சாரம் தாக்க,
ஆண்விழிகள் துடிக்கும் அதிசயம் இன்றுகண்டேன்!
No comments:
Post a Comment