Wednesday 28 March 2012

The Earth’s love in a Nature scene!



அகிலத்தின் ஒருநாள் காதல்! 


காலைவர மகிழ்ந்து கதிரவனைக் கண்டு,
சோலைவனம் துள்ள ஓடினாள் மானாக!
தாழம்மணம் தழைய பாடினாள் குயிலாக!
நீலமேகம் நீந்தஆடினாள் மயிலாக!

மாலைவர மேற்கில்,மயங்கி அந்திச்சிவப்பில்,
கோலம்போட கதிரவனும், குளுமைப்பெற்று நழுவ,
ஆலைப்புகை போன்றுஅவனியை இருள்சூழ,

விண்ணிலா தங்கைவிலக்கிமுகில் திரையை,
புன்னகைஒளித் தெளிக்கபுவிநேசம் சுரப்பில்,
தண்ணீர் தழும்பும்குளத்தைமுகம்பார்எனத் தந்தாள்!

தாரணியை நோக்கிஓர் தாரகைப்பெண் கண்சிமிட்டி,
ஆறிடுவாய் மனம்;இன்றேன் அமைதியின்மை கொண்டாய்
பார்எனைநீ பகலவனை நாளைகாண்பாய் என்றாள்!

எங்கோஓர் சப்தம் எண்திசையும் அஞ்சச்செய்ய;
அங்கே ஊர்ந்துவந்த ஆகாயமுகில் தேரில்ஏறி;
தங்கமேனித் தாரகையும்தண்ணிலாவும்மறைய...

இடிஓசையைச் செய்ததுயார்இடிபேரன் தகப்பன்தான்;
துடிமீனாய் துயர்கொண்டாள்புவியோதந்தைகோபத்தால்;
நெடியதொரு அவன்மூச்சுநீங்காகொடும் புயலாக...

தன்பெண்ணின் தவறென்ன எனவானம்தன் கணவன்முன்,
கண்ணீரை மழையாய்கனிந்துருகிப் பெய்தாள்;
தண்ணீரால் வியர்வையெனதன்மகளை நனைத்தாள்.

கண்ணான மனைவிபுலம்பகவலையுற்ற புவியின்தகப்பன்,
மண்மகளின் காதலுக்குவாழ்த்துச்சொல்லி அகன்றான்
விண்தாயும் மென்புவியைஅரவணைத்துக் குளிர்ந்தாள்.

வெண்ணிலா புன்முறுவலுடன் மீண்டும்அங்கே ஒளிர...
விண்மீன்கள் கண்ணசைத்துமெளனமாக களைய...
மண்பெண்தன் கவலைநீங்கிமணமகள் போலானாள்.

Tuesday 27 March 2012

கதிரவனில் பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!

கதிரவனில் பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!
A Scientific reality...

அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் ஆங்காங்கே
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரல்கள்
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனில் 
பிண்டுப் பரிந்ததேநம் பூமி!


Thanks :       Dinakaran  for published through  the
                       Tamil Daily E-Mail News, 31.3.2012

கதிரவன் எரிந்து மறையும் நாளில்…!

 
 Thanks :     Dinakaran  for published through  the
                      Tamil Daily E-Mail News, 31.3.2012

 

கதிரவன்  எரிந்து,
கருகிச் சுருங்கி,
மறையும் நாளில்,
மதியொளி இழக்கும்!

தூசிப் படலம்,
வானில் பரவும்;
இரவும் பகலும்,
இல்லா(து) இருளும்!

கடலலை நிற்கும்;
கடுங்குளிர் பிறக்கும்;
பூமிப் பரப்பை,
பெரும்பனி மூடும்!

பனிப்பொடி உள்ளே,          
மானுடம் உறையும்;
கனிக்கொடி செடிமரம்,                   
கருகிப் புதையும்!

கற்களில் செதுக்கிய,
கலை ஆலையங்கள்,
உலோகச் சிலைகள்...
சிதையா(து) மிழும்!


















வேறொரு கிரக

மானுடம் அனுப்பிய
பறக்கும் தட்டு
பூமியைச் சுற்றும்!

புவனம் முழுமையும்,
புகைப்படம் எடுக்கும்;
அவனி மண்ணை,
ஆய்வும் செய்யும்!

உயிர்கள் வாழும்...
பதத்தில் அகிலம்,
துயில்வதை உணர்ந்து,
உள்ளம் உவந்து!

செத்த ஆதவனை,
ஆய்வறி வாலே,   
உயிர்பெறச் செய்யும்
ஒளிவெப்பம் தெரிக்கும்!
பார்-எங்கும் படிந்த,
பனித்தளம் உருகும்;
கொடிசெடி மரங்கள்,
மெதுவாய் தளிரும்!


              மானுடம் மீண்டும்... 
              பலமதம் படைத்து,
              மொழிஇனம் பிரித்து,
              மோதல்கள் செய்து,
              மடிந்திட உயிர்க்கும்!  


!  


   


Monday 26 March 2012

A request to my mother... தமிழ் அன்னையிடம் வாழ்த்துக்கள் பெறப்பட...!


        அன்னைக்கு வணக்கம்!

வற்றிடா வெம்மைநோய் வாட்டிட நக்கீரர்
பொற்றா மரைக்குள் புகுந்தாராம் - முன்னோர்போல்
கற்றால்நான் நின்னைத்தான் கற்றுயர்வேன்; மற்றெதையும்
சுற்றேன்என் தொண்தமிழே! வாழ்த்து.


Sunday 25 March 2012

A request to our nations...உயிரைநா டொற்றுமைக்கும்...


அன்பைத்தாய் தந்தைக்கும் ஆசையைத் தாரத்திடத்தும்
பண்பைசேய் நண்பற்கும் பாடுபடும் உன்னை
அயலார்நாம் என்றேய்க்கும் ஆணவச்சொல் மாய்ப்பிற்கும்
உயிரைநா டொற்றுமைக்கும் தா!