Monday, 27 August 2012

தேன் நிலவைத் தேடி...



அவன்:

வானைத் தொடமுயலும் மலைச்சிகரத் தைவருடி...
தேனைத் தெளித்தமிழாய் திகட்டாம லேபொழியும்,
வீணை மழைமுகிலே! விண்ணிலவை மறைக்காதே!
நானும் அதைகாண நாணம்ஏன் விலகேன்!


அவள்:

மகிழ் காட்டுத் தாரகையர்,
மயங்கிக் கண் சிமிட்ட;
பகற்காட்டைத் தவிர்த்து,
இருட்காட்டை விலக்கி,
புகழ்காட்ட நாணி,
ஒளிக்காட்டைக் காட்டி,
முகில்காட்டுள் நிலவேன் தேய...
திகிற்காட்டுள் இரவில்
மரவனம் மறைவில்,
சென்றாளாம்; எங்கோ நீயே தேடு!


அவன்:

வான சமுத்திரத்தில் வந்திறங்கி நீந்தி
ஆன வரைஎழிலை அப்படியே காட்டி - நிலவு
தேனை ஒளிவடிவில் தேக(ம்)மீ தூற்றி,
மானெனவே மறைந்தாளே வாநீயும் தேடு!


அவள்:

நாணம் மறந்தவொரு நங்கையென கங்கையினை,
வானம் தொடுசிவனின் வார்ச்சடையுள் காணஉடன்
தானும் இறங்கியவன் தண்முடியைச் சுற்றிவர...
போனாளோ குறைமதியாள் போய்அங்கும் தேடு!


கூடுதலாக:


Classic - படவரிசை தற்காலிக சேமிப்பில் பகிர்
Google+ இல் பகிரப்பட்டது. (இடுகையைக் காணவும்.)






4)  Read the VERSES (i.e., the Comments)

Also Click the Labels: Pictures and Verses

No comments:

Post a Comment