சிவன்கண் திறக்க செஞ்சுடர் அன்ன,
குவியலை எண்ணம் கொதிகலன் ஆக,
துவளிடைத் தேய துயரம் தகிக்க,
தவிக்குதேஎன் காதல் தனம்!
காயும் நிலவோ? கருக்குகின்ற சூரியனில்,
பாயும் கதிர்சூடோ? பார்வையினால்(அவர்) – மேய,
கடைகூர் விழித்தீ கணைப்பட்டு நெஞ்சு,
தொடையிடைச் சூடா னதே!
மன்மதன் வந்து மயக்கியே முன்னிரவில்,
பின்னிப் படர்ந்திருக்க, பின்னிரவில் மின்னலென,
கண்ணெதி ரேத்தோன்றி காதல் சுரக்க;
தண்ணிலவும் சுட்ட தடி!
என்'பார்'(அவர் உலகம்) இனிநீ எனக்கெனவே; பக்கம்வா,
என்பாரோ என்அத்தான்; இன்றிரவு(வு) அன்பால்(நான்),
கனிப்பால் கொடுக்கஉன் கன்னம்தா என்றே,
இனிக்கஉண் பாரோ இதழ்கள்!
No comments:
Post a Comment