ஆவி (சுவாசிப்பது) உடலிலே, அகன்ற பின்னுமே;
ஆவி(வெறுமை) சாந்தியாம்(அமைதி) அடையப் பரிகாரம்,
வே(ள்)வி செய்யென, திருடும் *ஊழனை
பாவி என்பனே! பதரும் என்பனே!
ஆவி பேயென்று அரற்றித் திரிபவனை;
ஆவி(சுவாசம்) அகன்றும்மறு பிறப்புண்டு என்பவனை;
காவி கடவுளென காசுப் பறிப்பவனை
பாவி என்பனோ? பன்றியும் என்பனே!
இறந்தவர் சடலத்துள் இயங்கல்(உயிர்) பிரிந்ததும்,
மரித்தவர் சுவாசம்(ஆவி), பேயாய் மாறிடும் - உடலம்
எரியுண்டும் புதைபட்டும் இயங்கா நிலைமையிலும்,
இறந்தவர் ஆவி(சுவாசம்), எழுந்து இடுகாட்டில்...
சதையின்றி தெருக்களில் திரியுது சாத்தான்! (என்று),
கதைவிட்ட ஏய்ப்பர்கள் கற்பனை மயக்கிட,
மதம்அதில் சிதைய மனம்மதி அழிய...
மதித்தவர் இழப்பது மானம் பணம்பொருள்?
கதைவிட்ட திருடர்கள் கறப்பது தொடர்கதை!
பாவம்பேய் புண்ணியம் பல்லிகிளி சோதிடம்!
காவுபலி பூசை கடவுள் விதிலீலை!
தேவருல கம்நரகம் தீண்டாமை சொர்க்க(ம்)இவை
யாவும் அயோக்கியர் கொல்கை! (ஆயுதம்!)
*ஊழல் செய்பவனை
தனிக் கவிதை:
ஏய்ப்பவர்கள் ஏய்த்திடுவர் ஏய்ப்பவரை ஏய்என்றே
ஆயாமல் ஏற்கும் வரை!
No comments:
Post a Comment