Wednesday 30 July 2014

ஏக்கமாய் நோக்காதே! என்றன் தூக்கத்தை...

https://plus.google.com/u/0/app/basic/photos/

ஏக்கமாய் நோக்காதே! - என்றன்

தூக்கத்தை இரவுவர தீய்க்காதே!

காக்க உன்னை வைப்பேனோ? எனக்கு...

வீக்கம்பெற ஆசை ஆக்காதே! 
காதல்வெறி...
மீண்டும் மீண்டும் ஏற்றாதே!

கண்ணுள் குதித்துக்கற் கண்டாய்,
உடைப்படாதே!
என்கனவே... தூங்கவிடு என்னை!

Thursday 17 July 2014

வான்  பரப்பில் உலா வரும்  தாரகையர் கலைக் களம்!

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/photos/

வான்  பரப்பில் உலா வரும்,
தாரகையர் எழில் ஒளிரும்...
கலை நிலைக் களம்!

காண் சுற்றிட அவாக் 

கொள்ளும்...
தேன் ஈக்கள் புகா வனம்!

ஆசை ஒழுகும் பலாப் பழம்!

நான் அதிசயிக்கும்...
நிலாத் தளம்!

பூமியில்... ஒரு  சிலருக்கு,

கவர்ச்சி அக்கிரமம்!

பலர் பார்வைக்கு உன் அழகு,

சுவைக்கும் அப்பளம்!

எனக்கோ இன்னமும் அடையாத,

செவ்வாய்க் கிரகம்!

Wednesday 16 July 2014

உன் விழி... வெட்டிலே உருசி அறி!

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/photos/+Spotraters/album/

அவன்:

நிலவை முகில் வருடிட,
ஒழுகிடும்...
நினைவு மழையொடு;
அமிழ்து கவிதை கனிய...
சுவை சொட்டிடும்,
காதல் தேன்கூடு நீ!

எட்டுமோ கனி?
பட்டுஎழில் சுழி...
தொட்டு, சூடு நீ தணி!

அவள்:

லட்டுச்சுவை அணி!
தட்டில் இட்டு வெட்டு;
காதல் திட்டில்...
நீ, வெற்றிச்
சுட்டிதான் இனி!

இது ஒட்டும் மாங்கனி!
எட்டிப் பற்றி
தட்டித் தொடு,
கிட்டுமேஉன் விழி...
வெட்டிலே உருசி அறி!

Wednesday 9 July 2014

வேர்கடலை போல் வாய்பிளக்க...

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

பரந்தாமன் கதை அன்ன;
பாற்கடலுள்... பார்!
வேர்கடலைபோல் வாய்பிளக்க,
பாம்பு, படம் எடுக்கும்; சீண்டாதே!

பார்! சிறுவனே, நான்பூ அல்ல!
போர்க்களமாய் என்னை;
நோட்டமிட நீ  என்ன...
பாரதக்கதை அர்சுனனோ?

ஆர்ப்பரிக்கும் அல்லி என,
வில்வேல் ஆயுதமாய்...
என்னுள் உண்டு...
இமைவிழிகள்!

மோத முயன்றாயோ,
பழனிமலை அன்ன,
கேடயங்கள்... இரண்டு,
எதிர் கொள்ளும்!

திரும்பிப் பார்க்காதே போ!
பக்கம் வர, உன் தலை...
பாற் கடலுள் மூழ்கிடுமே!
 உருண்டு, என்...பாதம் தொட்டு,
உயிர் விடுமே!

Monday 7 July 2014

அந்த ஒரு  பார்வைப் போதும்!

View more arts  [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream
 
Artist:  Sauro 

அந்த ஒரு  பார்வை போதும் - நான்
அன்றாடம்  வாழ! 
உன்மேல் என்பாசம்...
ஒவ்வொரு நொடியும் வளரும்!

அந்த நிலவு ஒளிஅன்ன நானும்;
உன்னை நினைப்பேன்!உன்கனவில்...
தினமும் மழலையாகி, சிரிப்பேன்!

எல்லா நாளும் பகலும் - நீ,
எங்கிருந்தாலும் உன்நினைவில்;
சுவர்மேல் சாய்ந்து மனத்துள்...

உன்னை எண்ணி தவிப்பேன்!
நனவில் உன் முகம்...
கற்பனையில் தோன்ற, துயில்வேன்!

Sunday 6 July 2014

இவளின் அழகிய இதழ்களின் திறப்பில்...

View photo [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/

சிவனின் கதையாய் திரிபுறக் கண்ணால்...
இவள்எதை நோக்கினும்,
இன்பம் மகிழும்!
அவிழும் இதழ்கள் அழகிய 
திறப்பில்...
எவனும் இழப்பான், உயிரே!


ஒழுக்கம் இணைந்த  காதல் பழக்கத்தில் பாசம் பழுக்கும்!


View photo [Click > URL]
https://plus.google.com/app/basic/stream/zoOmTV/

அவன்:

உறவுள் முகிழ்ந்திட்ட காதல் மனித
மரபுள் மகிழ வளரும்!

உன்னை எண்ணி  எண்ணி
இரவெல்லாம் உறக்கம் இழக்கின்றேன்!

அவள்:

ஒழுக்கம் இணைந்த 
உறவேசொல் காதல்!
பழக்கத்தில் பாசம் பழுக்கும்!

கண்ணில் உண்ணும்;
கனவுகளை...
பின்னிப் பின்னி - நானும் நனவுகளில் உறைகின்றேன்!

Thursday 3 July 2014

வாழ்நாளில், ஓர்நாள் உன்னை நான்...



View picture [Click URL]:

https://plus.google.com/app/basic/photos/100981147144591622714


கண்ணே நீ! ஆசையை, சொல்லாமல்...

என்னை விலகிச் செல்லாதே!
நில்... நில்!

கரும்பே! நீ இல்லாமல் உயிர்...

வாழ்வேனோ?  உண்ணாமல்;
சொல்லாமல்... செல்வாயோ?
சொல்... சொல்!

நீ எங்கு சென்றாலும் - என் நினைவுகள் நிழலாய், பின்தொடரும்! என்னை...

தள்ளாதே; அள்... அள்!

நீ எது வேண்டும் என்றாலும்,

சொல்! என் காதல் மனம்...
உன்னைச் சுற்றும்; வெல்!

மெளனம் காக்கும் வானம்,

மழையைத் தராது - கவனம்!
கவலை தருகிற துயிலுள்...
கனவும் இராது; தினமும்!

வாழ்நாளில் ஓர்நாள்,

உன்னை நான் மகிழ்விப்பேன்!
இனி நம்மிடையே...

பிரிவே இல்லை என்று,

பாஉரைஅய்யன் பெண்ணாக்கி,
சாதிஎது எனக்கேட்டு ஓதுவேன்!