தன்னைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் தன் காதலரை மேலும் சோதனைக்குள்ளாக்காமல் நின்று அவர் வந்தபிறகு உடன்செல்லலாமா என்று ஒருகனம் மனம் எண்ணிணாலும் மறுகணமே, தான் அவருக்காக அக்கறைப்பட்டு நிற்க, அவர் உடனே "அடிக்கள்ளி நான் இல்லாமல் உன்னால் எவ்வளவு நேரம்தான் தனியாக செல்ல முடியும்; நீ எனக்காக நிற்க வேண்டும்; அப்போதுதான் நான் உன்னை நெருங்க வேண்டும் என்று எண்ணியதால் அல்லவோ நான் இதுவரை உனக்குப் பின்புறமாக சற்று தள்ளியே வந்துகொண்டிருந்தேன் என்று பெரிதாக கதையளக்கவோ அல்லது ஏன் நின்றுவிட்டாய் இரவில் தனிமையில் செலவதற்கு பயமாக இருக்கிறதா என்று கேலி செய்யவோ ஆரம்பித்துவிடுவார்; அதனால் நான் அதற்கெல்லாம் இடம் அளிக்கக் கூடாது; அதேசமயம் அவர் தன்னைப் பின்தொடநர்ந்து விரைவில் எட்டிப்பிடிக்கும் வகையில் சற்றே தாமதித்ததுச் செல்லலாம் என்று தன்குள் தீர்மானித்து விட்டவளாய் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தாள் என் கைக் கடிகாரத்தின் உள்ளிருந்த சின்னமுள்.
"என்ன இருந்தாலும் நீ பெண்தானே! உன்னால் எவ்வளவு நேரம்தான் என்னை விட்டு விலகிச்சென்று போக்குக் காண்பிக்க முடியும். இதோ நான் வந்துவிட்டேன் என்று தனக்குள் எண்ணிக் களித்திட்டவாறு தன் காதலி சின்னமுள் அருகில் வந்த காதலன் 'நெடியமுள்' சாண்டில்யன் கதைகளில் வர்ணிக்கப்படுவது போல் அவளை மெதுவாகத் தழுவ ஆரம்பித்தான்; அப்போதுபார்த்து அதுவரை முகிலுக்குள் மறைந்திருந்த நிலவு அவ்விருவரது நிலைமையை அறிந்திராததால் வெளியே வந்து பூமியை நோட்டம் விட்டது.
ஈருடல் ஓருயிர் என்பார்களே அதேபோல் இருந்த அவ்விருவரிலும் யார் பெண் யார் ஆண் என்று புரிந்துகொள்ள இயலாதபடிக்கு அந்நடுஇரவு நேரத்தில் அக்கடிகாரதின் சிறு வட்டப்பாதைக்குள் இருவரும் ஒன்றுபட்டு ஒரே உருவமாக காட்சிதந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நிலவு தன்னுடைய திடீர் வரவால் அவ்விருவருடைய தனிமை காதல் இன்பம் கலையலாகாது என்று மொகஞ்சதாரோ உறரப்பா காலத்து மானுட நாகரித்தைக் கடைப்படித்தவளாய் மீண்டும் மேகக்காட்டுக்குள் அவளுடைய காதலன் கதிரவனை காணும் தாபத்தில் சென்று மறைந்தாள்.
மேகம் விலகி வெளியே நிலவுவந்த அந்த நேரத்தில்... ஓ! இரு மனிதக் கண்கள் வெண்ணிலா வெளிச்சத்தில் நம்மை கூச்சமேதுமின்றிப் பார்ப்பது போல் தெரிகின்றது; இது இந்தக் காலத்து மானுட நாகரிகம் என்ன செய்ய; என்று நாண உணர்வு மேலிட காதலன் 'நெடியமுள்' அடுத்தவினாடி தன்னைச் சுதாரித்துக்கொண்டு தன் காதலி சின்னமுள்ளை விட்டு நல்லப் பிள்ளைப் போல விலகி அதேசமயம் சின்னமுள் தன்னைப் பின்தொடரும்படிக்கு அவளுக்கு முன்பாக மெல்ல நகர ஆரம்பித்தான்.
சற்றுமுன் காதலர்கள் இருவரும் தழுவியபடி இருந்ததை நிலவு வெளிச்சத்தில் நான் பார்க்க... என் மனம், "மணி இரவு 12.00 ஆகிவிட்டது; அவள் (என்னுடைய மனைவி) வீட்டில் தனியாக இருப்பாளே; வீடு செல்லும் வழியில் சுடுகாடு வேறு தாண்டிச் செல்ல வேண்டிருக்கின்றதே; என்று பலவாறாக தனக்குள் முணுமுணுத்துக் கொண்டது. நான் வீட்டை நோக்கி நடையை சற்று விரைவுப்படுத்தினேன்.
இரவில் குளிக்குமோ... பேய்? (பாகம்-2)
நாளை வ(ள)ரும்.
|
< இரவில்... குளிக்குமோ பேய்?
மேலும் கதைகட்கு > சொடுக்கு
Labels:
கூடுதலாக:
(Seen above)
|
Wednesday, 29 August 2012
இரவில் குளிக்குமோ... பேய்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment