Saturday 27 October 2012

இலையும் அசையும் கொடிமேல் உன்...


                                                                                 Page-2
To go Page - 1
 
 
அவன்:

சர்...ர் எனக் கணைவிடும்,
சிறுவில்-வடி வொடு...
மொருமொரு புரு வங்கள்!

கருகரு என சுருளாய்...
காணும்... அலை முகிலாய்,
புருபுரு கார் குழல்கள்!

இருகரு விழிமீ(து) இணையாய்,
விலகும்... தழுவும்,
துருதுரு மயில் இமைகள்!

சிலுசிலு பனித் துளிகள்
தீண்டும்... உரோசா,
பரு(கு) எனும் இதழ்கள்!

நகரும் நதிசிறு சுழியாய்
எழில் நாபி - எஃகு
காந்தமாய் என்னை ஆள...

மொலுமொலு எனத் திகழும்
முன்னவன் பல்லவன் - அரசு
கலைச்சிலை உயிர்... பெற்றதோ?


அவள்:

அலையாய் அணைக்கும் தென்றலே! - இந்த
அணங்கைக் கவனி! - கனியொடு...
இலையும் அசையும் கொடிமேல் - உன்
இசையைப் பதி நீ!
 
 
 
 
 
           Visit also:  படவரிசை 26/10/2012
                             (Newness)  & படவரிசை 12/10/2012
 
          அறிவியல் +  காதல்  கவிதைகள்:
             சொடுக்கு :    என் கவிதைப் பிரளயமே!
                                            என் - இடதுபுறத்து இருதயமே!
 
 
 
 
 
 
 
 
 
நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்    சொடுக்கு :
 
 
 
 
 
 
 
அறிவியல் சாந்த கவிதைகள்:
சொடுக்கு :
 
 
 
 
 
 
 

Wednesday 24 October 2012

ஒற்றுமை வளம் உலக நலம்!


                           
        Page-1                     
                                                  ஒற்றுமை வளம் உலக நலம்!
முன்னுரை:

  
         
          இந்நாள் தலைமுறையினரின் எதிர்கால வாரிசுகள் துன்பமோ துயரமோ
இன்றி மேன்மையுற வேண்டும் என்கின்ற அடிப்படையில் பின்வரும் கட்டுரையானது அமைகின்றது. இக்கருத்துக் கருவூலம் இந்தியா என்கின்ற தனிப்பெரும் நாடு மட்டுமன்றி முன்னேறாத பிறஉலக நாடுகளும் பயனுற வேண்டும் என்கின்ற அவா மற்றும் ஆதங்கம் பேரிலும் உருஆகின்றது! இக்கரு மழலையாவதும் நிராகரிக்கப்படுவதும் அந்தந்த நாட்டு அரசுகளின் விருப்பம் மற்றும் மக்களின் மனோபாவம் சார்ந்தது!

 
கட்டுரை:

            2)
மானுடம் வாழும் பூமிப் பரப்புக்குள் என்ன நடைமுறைகளெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எண்ணுகிறீகளோ அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். அவ்வாறான பட்டியலுக்குள் அநேகமாக இலஞ்சமும் ஊழல்களும் (கையூட்டுக்கள் பெறுவதும், தருவதும்) என்பதானது முதலாவதாக இடம்பெறக் கூடும். அந்தப்படிக்கு பட்டியலுக்குள் இடம் பெற்றிடும் அனைத்தும், அடுத்துவரும் பத்தியில் தெரிவித்திட்டபடி தகவல்கள் நடைமுறையில் அமுலுக்கு வரும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகட்குள் யாவும் களையப்பட்டுவிடும் என்பதானது ஒட்டுமொத்த மக்களின் நலம் மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்துதல் என்கின்ற அடிப்படையில் முறையே ஆய்வுச் செய்கையில் உறுதிப்படும்.


         3)
சமீபத்திய என்னுடைய *கவிதை ஒன்றில் பின்வருமாறு தகவல் தரப்பட்டுள்ளது:
குடும்பத் தேவைக்கேற்ப நிலபுலங்கள்
     சொத்து உரிமைக்கும் உச்ச வரம்புகண்டு
,
கொள்ளுப் பேரர் காலம் முடியும் மட்டும்

     செல்லும்வரம்பு என்று விதிகள் கொண்டு,
அனைவர்கும் கல்விவேலை வீடுபோன்று மருத்துவ
     அவசியமும், வழங்க அரசுகள் உரிய சட்டம்கொணர
 

             --
என்று உள்ள இக்கவிதையில் தெரியவருகிறபடி சொத்துக்கு உச்சவரம்பு அரசுகளால் நிர்ணயிக்கப் படுகிறபோது அவ்வாறு நிர்ணயிக்கும் உச்சவரம்புக்கு மேல் உபரியாக அறியப்படும் தனியார் உடமைகளை (அதிகப்படியான சொத்துக்களை) அரசு தன்வசப் படுத்திக்கொள்ளுமா என்றால் பின்தொடரும் தகவல்கள்படிக்கு சுமார் ஒருவருட காலத்திற்கு அதற்கு அவசியமே ஏற்பட வில்லை.

         4)
மேற்குறிப்பிட்டவாறு நிர்ணய வரம்புக்கு மேல் மிகுதியாக உள்ள சொத்துக்களை, சொத்துக்கள் மற்றும் உடமைகளின் உரிமையாளர் தன்னுடைய விருப்பப்படியும் முடிவுப்படியும் அவர்களாகவே மேற்படி நிர்ணய வரம்புக்குள் சொத்து இல்லாத சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், முதியோர் இல்லங்கள், மேலும் உறவினர் இன்றி அலைகின்ற அனாதைகள் மற்றும் பிச்சை எடுத்து உயிர் வாழ்கின்றவர்கள் என்று எவருக்கும் (மனிதநேயம் அடிப்படையில்) தானமாக மற்றும் இனாமாகத் பகிர்ந்தளித்திடலாம் அல்லது வேறொருவருக்கு மொத்தமாகத் தரலாம் என்பதற்கு, தனியொரு நபருக்கும் மற்றும் அனைவருக்கும் உரிமையளிக்கப்படுகிறது. ஆனால், இது அதிகபட்சமாக ஒரு வருட காலத்திற்குள்  நிகழ்ந்தாக  வேண்டும்.
         5) எனவே சொத்து உச்சவரம்பு நிர்ணயச் சட்டம் சம்பந்தபட்ட அரசுகளால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு வருட காலம் முடியும் வரை தனியார் எவருடைய சொத்தையும் மற்றும் நிறுவனங்கள் உடமைகளையும் அரசு கையகப்படுத்தாது. அதனால் பொதுவுடமைச் சித்தாந்தம் இக்கருத்துக் கருவூலங்கட்கு சற்றும் பொருந்தாது என்பதும் இங்கே அறிவிப்பாக வெளியிடப்படுகிறது. பொதுவுடமை சித்தாந்தம் ஏழைப் பணக்காரன் பாகுபாடுகளைக் களைய முற்படுவது. நமது கருத்துக்கள் அனைவருக்கும் சொத்துரிமை சமஅளவில் துய்க்கப்பட முறையே அனுமதித்துச் செயற்படுவது.
           6)      அடுத்தபடியாக சொத்து உச்சவரம்பு அளவானது எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?  இந்த வினாவுக்கான பதில் பின்வருமாறு: