Thursday, 20 September 2018

முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சென்னை.

தமிழ் மன்றம்

My Photo
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
சென்னை, தமிழ் நாடு, India
மேலும் அறிய

இணைப்புகள்

 Willswords M சொல்வது... 
உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்... 
உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! 
அவ்விதமே...

நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்...
தாய் நிலைப்பதும்,       
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று;
புன்னகைத்து நாணும்...

அன்னைப்போல், செம்மொழியால் யார்...
கவிஞர் ஆனாலும்...
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? 
விண்வருடும் தாய்தமிழே!

பின்னிரவில் கண்விழித்துப் பேணிச் சுறு... 
சுறுப்பை (மணி)பன்னி...
ரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்...
பெண்ணேபோல் 
விண்ணில்,பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்?
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்!

அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க,
விழியேன் என்றே விடியல் குளிராய்,
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய்,
விழிவழி பேசு விழிப்பேன்!

உலாவும் உலகும் உருளும் கதிரோன்,
நிலாவும் உராயும் நெழிமுகில் வானும்,
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை,
பலாமாவும் பாடும் தமிழே!

மலரும் கொடியும் மணமும் முயங்க,
நிலவும் ஒளிர நிலமும் குளிர,
களத்துள் முனகிடும் காதலர் அன்ன,
குலவும் குயில்கள் குரலும் தமிழே!

சிரிக்கும் இயற்கைத் திறக்கும் மொழியும்,
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவைச்
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை,
விரிக்கும் அரியும்... வியக்கும்!

கமழும் மணத்தை கனியும் வனங்கள்,
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல்,
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும்,
தமிழ்தான் இளமையெனத் தாவும்!

எடுக்கத்தேன் பூமேல் ஏறும்வண்(டு) அங்கே
அடுக்கும் இசையும் அதனால் அசைந்து
கொடுத்து மகிழும்பூ கொட்டும் சுவையும்
துடுக்கும் தமிழுக்கே சொந்தம்!

கமழும் மணத்தைக் கனியும் வனங்கள்
உமிழும் சுகத்தை உணர்ந்த மலர்கள்
அமிழ்தைப் பருக அமரும் அரியும்,
தமிழ்தான் சுவைஎனத் தாவும்!


எதுவோ ஆதாரம்? தமிழே!

 வெல்லத் தமிழொடு விண்தொடு கற்பனைத்...
துள்ளக் கருவெடு சொல்லுள் இறுக்கிஉன்...
கல்வி முனைமீது காயம் சுழலநீ...
சொல்,சொல்; கவிதைச் சுரக்கும்! 

உயிரும் உறவும் உடலும் உடையும்
வயி(ற்)றை நிரவும் வயலும் மணியும்
அணுவும் துணையும் அசைவும் இசையும்
தினம்என்வாய் தீண்டும் தமிழே!

பனிப்பட அசையும் பாசக் கொடியாய்
தனிமையில் காற்றொடு தலையசை வயலாய்
கனவுக்குள் நிலைத்த கனிகை நினைவாய்
எனக்குள் இனிப்பது எப்போதும் தமிழே!

அவளின் முகமா? அசையும் இதழா? 
உவகை நிலவா? உதிர்க்கும் ஒளியா? 
தவழும் முகிலா? தளிர்மின்னற் பாய்வா? 
எதுவாம் எழிலோ? தமிழே! 

தயிரோவெண் ணெய்க்கு,வான் தண்ணீர் 
வயலுக்கு;
உயிரோ இணையும் உடற்கு - 
மயிலே! 
எயிரைக்காண் பல்போல் இசைக்கும் 
தமிழ்தான்...
குயிலுக்(கு), ஒயிலுக்(கு)ஆ தாரம்!

வான் தட்டும் மழைஉண்டு வனங்கள் உயரும்;
மீன்முட்டும் அலைதொட்டு நதிகள் நகரும்;
காண்எட்டு திசைசென்றென் கவிதை சுழலும்; (நான்)
தேன்சொட்டும் தமிழுண்டு தினமும் வளர்ந்தேன்! 


Posted 15th November 2014 by Willswords M

சொடுக்கு:







No comments:

Post a Comment