Saturday 31 May 2014

ஒவ்வொரு நிலையிலும் என் அழகு, உனக்கு...


உ ண் தேன்  என்று திறந்திட்ட
மென்இதழ்கள்...
ஆரஞ்சுச் சுளைகள்!

வீண்நீ என்று முறுவளிக்கும்
வெண் பற்கள்...
முல்லை மொட்டுக்கள்!

ஆண் நீ  வா என்று,
அதரங்கள் தடவிடும் நாக்கு!
சிற்றுண்டி கடை கேக்கு!

என் திசை நோக்குஎன்று
ஏக்கமாய் ஊடுருவும்
கண்கள்...
பாலுள் மிதக்கும்
நாவல் கனிகள்!

பாடும்  இசைநீ
இந்தப் பாவை பாட
உடன் இணை என்று
பட படுக்கும் இமைகள்...
வண்ணத்துப் பூச்சி
சிறகுகளின் அசைவுகள்!

என்மணம் நுகர்  என
தன்னுள் புடைக்கும் மூக்கு...
கிளிகள் நாணும் கவர்ச்சி!

ஒவ்வொரு நிலையிலும்
என் அழகு, உனக்கு
குருடன்  யானை...
கதை நிகழ்வே!

Click [URL]:
https://plus.google.com/

மயக்கம்தர...எதுவோ?


தமிழா? தமிழ்தெளிக்கும் சுவையா? சுவைகொடுக்கும்

அமுதா? அமிழ்தளிக்கும் மணமா? மணம்ததும்பும்
இதழா? இதழவிழ்க்கும் மலரா? மலர்சிதறும்
மதுவா? மயக்கம்தர... எதுவோ?
உன் புன்முறுவலே!

சந்திரனின் றுருளும் தரணிமகிழ் ஒளியா?

சிந்தனையுள் நிலைத்த தேர்ந்தகவிச் சுனையா?
அந்திநிற மும்மயங்கி அதரங்க ளிடையே முயங்கும்
தண்தமிழின் இனிப்பா?
நின் தளிர்நகையின் சுரப்பே!

அலைகடல் அழைப்பா? அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன சொலிப்பா? இலைகொடி யிடைகாணும்,
நிலவுஒளி களிப்பா? நீந்தும்நதி நினைப்பா?
அழகுமுல்லைச் சிறப்பா?
உன் அதரம்அவிழ் சிரிப்பே!

Click [URL]

https://plus.google.com/

       


Friday 30 May 2014

சன்னல்வழி மின்னல்கொடி...

உண்ணல் எது? தள்ளல் எது?
என்னும் சுவை அறியும்;

அன்னம் என...
காதல் தொடு [காமம் விடு]
என நாணம் தவழ;

சன்னல்வழி மின்னல்கொடி,
உன்னுள் அசைய...

கன்னம் தொட்டு...
கவிதை மெட்டு,
பண்ணுள் நிகழ... என்று தினம்

தின்னும் கனவில் உன்றன்
உறக்கம், கெடுக்கின்றேனோ?
என்னுள் வா; முயங்கு...
நானும்  மயங்கிடுவேனே!

Thursday 29 May 2014

காதல்... உதயமே!  ஒன்றுஉடன்  என்னை!


இதயத்தில், மூளை இயக்கத்தில்; பாயும்...
உதிரத்தில், இணைந்து ஓடும்;
உயிரில்...
பதிந்த உணர்வில், பளிச்சிடும்என் காதல்... உதயமே! 
ஒன்றுஉடன்  என்னை!


Click [URL]:
https://plus.google.com/


Wednesday 28 May 2014

என் தமிழ் அன்னையே! நீ, காட்டிட்ட அன்பு...

உயிர்கள் கருத்தரித்து இயங்கிடுதற்கு,
முன்னே...
பூமி உருப்பெற்றுச் சுழன்று உருண்டிட்டது அன்ன...

பூமி உருப்பெற்றுச் சுழன்று 
உருண்டிடும் முன்னே...
வானம் விளைந்திட்டது அன்ன...

வானம் விளைந்திடும் முன்னே
பெருவெடி!
நிகழ்ந்திட்டது அன்ன...

பெருவெடி நிகழ்ந்திட்டதற்கு,
முன்னே...பிரபஞ்சம்;
விரிந்திட்டது அன்ன...

தேன் எடுக்கும் முன்னே,
கொடிச் செடிகள்...
மணந்து மலர்ந்திடுதல் அன்ன...

நான் பிறந்திடுதற்கு  முன்னே,
பிறந்திட்ட  என்...
தமிழ் அன்னையே!

நீ காட்டிட்ட அன்பு, இன்று செழித்து;
புகழ் பூக்கள் விண்ணில் பரவி...
என்னை மகிவிக்க...
உன்னை வணங்குகிறேன்..
என் தாயே!

Tuesday 27 May 2014

மெளன  நதி நெகிழ  மேனி சிரித்திடுமோ?


                                                             Page – 2.


அவன்:
அமிழ்தசுனை அலைச்சுழல்போல் சுழல்குழியாய் நெழிந்திடுதே! - அட!
திமிர்த்தனமாய்ச் சுழன்றஎழில் சிறுநாபி எனமாறிட்டதே!
கார்முகில்கள் மயங்கியிவள் கவிதைக்குழல் ஆயிற்றே! - அந்தக் கூர்ப்பிறையும்  இவள்நெற்றியைத் தன்அசலென்றே [இக்]
                                                குமரிமுகம்  நோக்கிடுமே? 
      
 சரிந்துமது தெளிக்கும்கிண்ணம் பருவம்கண்டு தழும்பிடுதே! - தென்றல் விரிந்துதழுவ காதல்மூச்சு வெளிக்கிளம்பிக் கனலாகிடுதே!
அரிந்துவைத்த மாவடுபோல் அழகுநுதல் ஈர்த்திடுதே!
தெரிந்(து)வைத்த முத்தாரப்பல் தேன்இதழ்கள் திறந்திடுமோ?
நாணம், நழுவிடுமோ? நிலவு தழுவிடுமோ? முகிலை!
வானம், முனகிடுமோ? மழையைச் சிதறிடுமோ? புவியின்...
மேனி, சிலிர்த்திடுமோ? மெளன நதிநெகிழ - நெருங்கி
வாநீ எனகாற்று, ப்பெண் மதுஇதழை மெதுவாய் வருடிடுமோ?
To go Page - 1,
To go Page - 1,
(click) :
Click:                            Classic - படவரிசை (தற்காலிக சேமிப்பில்)
  மேலும் கதைகட்கு               
    < சொடுக்கு >

Sunday 11 May 2014

நீ என் மீது கொண்ட அன்பு...

உன்னை மறந்துவிடு என்று,
என் வாய் புலம்புகின்றது!
ஆனால் உள்ளம் மறுக்கின்றது!

நீ இறந்துவிடு என்று எப்போதும்,
என் உள்ளம் சொல்கின்றது!
ஆனால் காதல் தடுக்கின்றது!

நீ என் மீது கொண்ட அன்பு...
என்றாவது இணைவோம்,
என்று நம்பி... என்னை,
வாழும்படி செய்கின்றது!

தினம்தினம் அழுகின்றேன்!
உன்னை எண்ணி உருகுகின்றேன்!
நான் செய்திட்ட தவறுதான்!
உன்னைப் பிரிந்திட்டதுதான்!

நீ எப்போதும் என்னையே... பார்த்திட்டாய்!
நான் கவனிக்காதது போல்,
இருந்திட்டேன்!

அப்படி அன்று விலகிட்ட,
கொழுப்புத்தான்...
இப்போது பிரிவுநெருப்பில்,
உருகுகின்றேன்!  தவிக்கின்றேன்!

Saturday 10 May 2014

உமைசிவன் கதை மேருஅன்ன...

இமய மலைஏறல் எவர்க்கும், கடினமன்று!

உமையின் சிவன்ஆடும்
கதையில்...
உருளும் மேருஅன்ன;

அமைந்த வனபருவதங்கள் அசையாது தாண்டி...

இமைக்கா இவள்அழகை,
இடைவிடாது நோக்கும்...

சமயம் வந்தாலோ... [எவனும்] தடுமாறும் நிலைதானே!