சமைத்துண்ணும் அவரை, துவரை முதலான காய் கறிகளில் பெரும்பாலானவை செடிகளிலும் கொடிகளிலும் காய்க்கின்றன. ஆனால் அப்படியே, சமைக்காது உண்ணபடும் மா, பலா போன்ற கனிவகைகள் மற்றும் உண்ணக்கூடாத சமையலுக்கு உட்படுத்தப்படாத, காய் வகையாறாக்களை (நச்சுத்தன்மை யுள்ளவை, உதாரணம்: அரளி) இவையாவும் அநேகமாக மரங்களில் தயாராகின்றன. இது எதனால்? அது இயற்கை நமக்குச் செய்கின்ற உதவிகளில் ஒன்று.
சமையலுக்குப் பயன்படும் காய்கறிகள் அன்றாடம் அவசியமாகின்றன. அதனால், காய்கறிகளில் பெரும்பாலானவை சிரமில்லாமல் பறித்து பயன்படுத்தும் விதத்தில் செடிகளிலும் கொடிகளிலும் தயார் ஆகின்றன. தவிர, இவை பச்சையாகப் பறிக்கப்பட்டு சமைக்கப்படுவதால் சிறுவர்களின் கைப்பட்டு உயிர் மரிக்காது.
ஆனால் பச்சையாக சமைக்கப்படும் காய்களும் (உதாரணம்: முருங்கைக்காய்) மற்றும் கனிகளும், 'ரோசாவுக்கு' முற்கள் இருப்பது போல பாதுகாப்பை உத்தேசித்தே மரங்களில் காய்க்கின்றன; மேலும் பறந்து வரும் பறவைகள் சிறுவர்களின் கல்லடிப்படாமல் உண்ணட்டுமே என்று இயற்கை யானது, சமையலுக்கு உட்படுத்தப்படாத மற்றும் நேரடியாக உண்ணப்படுகிற, காய்கனி வகையறாக்களை மரக் கிளைகளிலும் மரங்களின் உச்சாணிக் கொம்புகளிலும் தயாராகும் படிக்குச் செய்கின்றன.
இதனிடையே சமைத்துண்ணும் முருங்கைக் காய்கள் எதனால் செடிகளில் பூப்பதில்லை மற்றும் காய்க்காது என்கின்ற இயற்கையின் ஏற்பாட்டுக்கு காரணம், அது தாம்பத்ய உறவுக்கு ஊட்டமளிப்பதாகவும் உள்ளதாகையால், வெளிநபர்களால் உரிய வர்கட்குத் தெரியாமல் பறிக்கப்படக்கூடும்; மேலும் உரியவர் களாலும் அடிக்கடிப் கொய்திடும் நிலைமையும் தவிர்க்க முடியாதபடி ஏற்படலாம். (தவிர, முருங்கைக்காய், மரங்களில் மற்றும் கிளைகளில் ஏறியும்கூட சுலபமாகப் பறிக்க முடியாது; கிளை ஒடிந்துவிடக் கூடும்).
|
Monday, 25 June 2012
செடிகொடிகளில் காய்கறி வகைகள் காய்ப்பதின் காரணம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment