< சொடுக்கு >
_____________________________________________________
Page-3:
இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)
என் மனைவி, "அவசரத்திற்கு ஒரு டார்ச்லைட் கூட நம்மிடம் இல்லையே" என்றதும், எனக்குள் ஒரு சிந்தனை உதித்தது; அவளை வீட்டில் இருக்குமாறு கூறிவிட்டு எதிர்த்த வீட்டு நண்பரிடம் சென்று நடந்தவற்றைத் தெரிவித்ததும், நண்பர் டார்ச் லைட்டுடன் அவரும் துணைக்கு வருவதாக்க கூறினார். இருவரும் வீட்டை அடைந்த போது, சத்தம் அப்போதும் வந்து கொண்டிருந்தது. சுவிட்சை 'ஆன்' செய்து பின்கதவைத் திறக்க சத்தம் நின்றுவிட்டது. முன்புபோலவே தரை ஈரமேதும் இன்றி வரண்டிருந்தது. காம்ப்பவுண்டு சுவற்றின் சற்று இருண்டிருந்த (வெளிச்சம் பரவாத) மூலைப்பகுதியை நோக்கி ஒளி பாயும்படிக்கு நண்பர் டார்ச் லைட்டை திருப்பினார். வெளிச்சத்தில் அங்கே இருந்த தண்ணீர்த் தொட்டியின் மீது நண்பர் ஏறி நிற்க, அவரைத் தொடர்ந்து நானும் அதன்மீது தாவினேன். சுற்றுச் சுவருக்கு வெளியே நாற்புறமும் டார்ச் ஒளியைப் சுழலவிட்டு ஏதாவது கண்களுக்குப் புலப்படுகிறதா என்று உற்றுப் பார்த்தோம். சில்லென்று வீசிய காற்றின் ஊடே அசைந்துகொண்டிருந்த செடிகொடிகள் மற்றும் பனைமரங்கள்தான் தெரிந்தன.
நான் தொட்டியைவிட்டு சலிப்புடன் கீழே இறங்கினேன். என்னைத் தொடர்ந்து இறங்கிய நண்பர் கால்களை தரையில் பதித்தபோது அவரிடமிருந்த கைஒளிர்வின் (டார்ச்சு விளக்கின்) ஒளி தற்செயலாக தண்ணீர் தொட்டிக்குள் பரவ, "ஐயா ஒரு வினாடி இங்கே பாருங்கள்" என்றார். உள்ளே பார்த்தேன். இப்போது எதனால் தண்ணீர் வாரி இறைப்பது போன்று சத்தம் வந்துகொண்டிருந்தது என்பதற்கான காரணம் புரிந்தது. அணிலொன்று நான்கரை அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர்த் தொட்டிச் சுவற்றின் மேற்புறம் குறுக்கும் நெடுக்குமாய் பாய்ந்ததில், உள்ளே சுமார் அரை அடி உயர அளவிலிருந்த தண்ணீர்த் தேக்கத்திற்குள் தவறி விழுந்திருக்கின்றது. (எப்போது விழுந்ததோ தெரியவில்லை); நான் எப்போதெல்லாம் வீட்டின் பின்புறக் கதவை மூடிவிட்டு வெளிபுறப்பகுதி டங்ஸ்டன் ஒளிர்வை (குண்டு மின்விளக்கை) அணைத்தேனோ அப்போ தெல்லாம் வெளிவிளக்கின் வெளிச்சமும் அணைவு (ஆப்) ஆக, ஆள் அரவமும் (sound) அடங்க, ஒவ்வொரு தடவையும் அணில் தொட்டியிலிருந்து வெளியேற முயன்றிருக்கின்றது. உண்மை என்னவென்பது அறியாமல் அதனால் உண்டான சத்தத்தைக் கேட்டு, பேய்தான் தண்ணீர் தரையில் படாமல் நடுஇரவில் குளிக்கின்றதோ என்று பயந்துவிட்டோம்.
நண்பர் லேசாக சிரித்தபடி, தொட்டியின் மூலையில் இருந்த அணிலை விரட்ட ஆரம்பித்தார். அணிலோ, சுவற்றோடு ஒட்டியவாறு பதுங்கிக்கொண்டிருந்தது; ஒருவேளை நாம் இருவரும் இங்கே நின்றபடி இருக்க, அணில் பயந்துகொண்டு வெளியே வரத் தயங்குகின்றதோ என்னவோ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவர், என்னிடம் சுமார் ஒரு நான்கு அடி நீளத்துக்கு கொஞ்சம் தடிமனாக கம்போ, விறகோ எடுத்து வாருங்கள் என்றார். நானும் அவர் கேட்டபடி ஒரு தடித்த மூங்கிலை எடுத்துவந்து கொடுக்க அதை, அணில் சுலபமாக தண்ணீர்த் தொட்டியின் மேற்பகுதிக்கு ஏறிவர வசதியாக, தொட்டிக்குள் சற்று சாய்த்து வைத்தார். பின்னர் தொட்டியின் அடிப்பரப்பை ஒட்டி வெளியே அடைக்கப்பட்டிருந்த துண்டுத் துணியை பிடுங்கி தொட்டித் தண்ணீர் காலியாகும்படிச் செய்தார். நண்பர் கைஒளிர்வை (டார்ச் லைட்டை) காலையில் தருமாறு கொடுத்து, வணக்கம் கூறி விடைப்பெற்றுச் செல்ல, அதன்பின்னர், எனக்கு இரவு உணவு...சத்தமின்றி பசி ஆறியது.
***
குறிப்பு :
இக்கதையில் எதுவும் மூட நம்பிக்கையை ஏற்படுத்து வதற்காக பதிவு செய்யப்படவில்லை; அணில் சார்ந்த சம்பவம் உண்மையானது. கதையோட்டமும் பிற யாவும் கற்பனையாகத் தரப்பட்டுள்ளன.
|
< இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)
< சொடுக்கு >
<மேலும் கதைகட்கு>
Labels:
கூடுதலாக:
(Wills in Kavithai Chittu on other Web Blogs/Sites)
[The Hagley's]
(Seen above)
|
Friday, 31 August 2012
இரவில்… குளிக்குமோ பேய்? (பாகம்-3)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment