உனக்கும்'கை' (உணவுண்ண) இருக்கையில் உழைத்திடடா! - நீ
உழைக்காமல் ஏய்த்தாயோ 'கை'இருந்தும், ஊனனடா!
உன்கை பாடுப்பட்டு உழைத்துநீ வாழ்ந்திடவே - உனக்கு,
பிறந்ததின் மதிப்பும், பெருமைகளும் புரியுமடா!
ஊழல் 'கை' சுரண்டல் பிழைகள் செய்கையிலே - நாட்டில்,
உழைப்பவரை அஃ(து) ஏமாற்றும் வஞ்சகமே!
கா 'கை', நேர்மை,'கை' காக்கையிலே – உன் (பாவக்)
கறைகள் மறைந்(து) ஒர்நாள் வாழ்க்கை சிறப்புறுமடா!
பொய்யாய் யோக்கியர்என்றுப் புகழ்பரப்பி மறைந்தாலும் - பலர்
உயிர்போன்று உழைத்து காத்தவற்றை அவர்பரம்பரைகள்...
உழைப்பின் சிரமங்களை உணராமல் நாட்டுக்குள்,
மோதல்செய்(து) அழிக்கின்ற, முன்நிகழ்வுகளை அறியாயோ?
பேதமதம் ஊதிக் கொழுக்கும் பிறவிப்புவி ஊனமே! - நீ
சேர்த்தவற்றைக் செப்பும்கடவுள் உனக்காக வைப்பானோ?
செத்தபின் ஓரடி நிலம்கூட உனக்கில்லையே! - ஞானம்
காண மறுபிறப்பும் கண்டவர்கள் இல்லையே! - பிறரை,
கவிழ்ப்பதும் திருட்டும்உன் கற்பனையில்... எதற்காக?
பிறப்பைத் தலைஎழுத்(து) என்று பிழைகள்செய்தே,
பிறர்உழைப்பை கவர்ந்திடுதல் கறையன்றோ?
பிறப்புறுப்பு வழிப்பேதம் ஓதிநீ மரிப்பதும்ஏன்? - உலகம்
உள்ளளவும்உன் சடலத்துள்உயிர் இயங்கிடுமோ?
உழை, 'கை' உனக்கும் இருக்குதடா! - சுரண்டல்
வினைச்செய்து பின்சாவது கேவலமடா! - வரும்
தலைமுறைகள் இணைய உழைக்க வழிகாணடா! - அதிலே
No comments:
Post a Comment