Thursday, 25 April 2013

நம் கனவு என்பது நாடு ஒற்றுமையில் நிமிர்வது!


Princy chandran's profile photo  Photos: Princy chandran


கடலைப் புரட்டிடும் டி.சுனாமியே-என்
உடலை நீந்தவிடு காதல் பினாமியே! - இது
விடலை விளையாட்டில்லை வினாஆழியே! - மணல்
திடலை திருப்பிக் கொடு என் கனாபூமியே!

 
 
அழகு என்பது நிலவு விலகாதது!
நிலவு என்பது பூமியை சுழல்வது!
அன்பு என்பது சூது இல்லாதது!
பண்பு என்பது அன்பைச் சுழல்வது!
 
 
ஊற்று என்பது ஆற்றுள் நீந்துவது!
ஆற்று மீனுக்கு ஆனந்தம் ஆவது!
நேற்று என்பது இன்று ஆனது!
இன்று என்பது நாளை ஆகுமோ?

 
 
இன்று என்பது நனவு ஆனது!
நாளை என்பது கனவு ஆயிற்று!
நனவு என்பது வேற்றுமையில் ஆடுது!
கனவு என்பது நாடு ஒற்றுமையில் நிமிர்வது!

 
 
-- Willswords Tamil Twinkles
    [http://willsindiastamil.blogspot.com]
 

No comments:

Post a Comment