சிறுவன்அச் சம்பந்தன் தீண்டி நகைக்க
இருமுனையும் அன்னையாய்நீ ஈந்து முறுவளித்த(து)
உண்மையே என்றால் உமையவளே! கங்கையவள்
தென்குமரி காணுமாறு செய்!
ஒரு கன்னியின் காதல் புலம்பல்!
மேகமென வெம்மை விலக்கவரும் தென்றலே!
வேகமாய் ஓடுவானுள், மேகமாய்க் கருத்தவனை...
ஏகமாய்த் தேடு என்தேக(ம்) புன்னகைக்கும்,
தாகம் தணிய வரச்செய்!
கூடுதலாக:
No comments:
Post a Comment