Saturday 26 April 2014

என் கவிதைகள்... உன் கால்கொலுசு!

என் கவிதைகள் - உன்
கணுகால் கொலுசு!
முழுஅழகு முன்,
உலகமே தூசு!

ஏ! நிலவே!
இவள் -
முகஒளிப் பொழிவை,
உன் தேகத்தில் பூசு!

உனக்குள் தகிக்கும் சூடு!
தணியவில்லை
என்றால்...
நீ  என்னை ஏசு!

இவள் கால்...
கொலுசுப் பரல்கள்;
தமிழ் இசை வெண்பா...
இனிய சிதறல்கள்!

பெண்ணே! உன்
பார்வைக் கொறிப்புக்கள்,
அன்றாடம் புதுபுது தினுசு!
பதினெட்டு வயது,
வாலிபன் எவனும்;

தமிழ்நாட்டில்...
அவன்முன் நீ  சிரிக்க,
பார்த்தான் என்றால்;
உடன் ஆகிடுவான் தனுசு!





Friday 25 April 2014

அ... கிழமே!  என் அகிலமே!

அ... கிழமே!
என் அகிலமே!

உனக்கு வயதே ஆகாதோ?
நானோ எனக்கு  நீ...
கிடைக்கவில்லையே என்று, ஏக்கத்தில்,
தேய்ந்து... ஒளியிழந்து;
அமாவாசைக்குள்...
மயக்கத்தில் முடங்கிட்ட  நிலவு!

இன்னுமா உன் மனம்
என்னையே நினைத்து
சுழன்று கொண்டிருக்கின்றது?

என்னை நீ கைப்பிடிக்க,
முடியாதபடி;
மதங்கள் தடுத்த போதே,
நான் இறந்துப்பட்டு...
விட்டேனே!

உன் நினைவு ஊஞ்சலில்,
என்னை நீ தாலாட்டிக்
கொண்டிருக்கின்றது;
தெரிந்தும்...

என் பெற்றோர்
வேறோருவனுக்குக்
[கெட்டியாக] கட்டிக்
கூட்டிக் கொண்டு போ
என்று என்னை
விபச்சாரி போன்று
வாழச் செய்தனரே!

அவனும் கடலாக எண்ணி,
இந்த ஏரியில்,
சுரண்டி மீன்  பிடிக்க;
ஒவ்வோர் நாளும்...
விடாமல்,
கப்பலோட்டிக்
கொண்டிருக்கின்றானே!

எனக்கு பிள்ளைகள்,
இருகின்றார்கள்;
அவர்களை,
தாய் அற்றவர்களாக்க...

என் காதல் உயிரே!
உங்கள்  மனமும்,
ஒப்புதல் அளிக்காது!
எனவே...
பூமியே அழிகின்றதாம்!

உடனே செத்துத்
தொலையுங்கள்!
இல்லை...
மூளையை உபயோகித்து
மத நம்பிக்கை அழிய
செயற்ப்படுங்கள்!

கடவுள்...
இல்லவே இல்லை;
என்பது...
மானுடம் முன்,
நிரூபனம் ஆகிடுமே!

Thursday 24 April 2014

`காதல் இலக்கணம்' என் காதலி பெயர்!

இளமையில் நான் சிரித்தேன்!
வலது கரம்,
சிரசு முடியை, அவ்வப்போது...
வருடிற்று!
காலம்  என்னைத் தழுவி,
நழுவிற்று!

இன்று நான் முதுமையில்...
கண் பார்வை மங்கிற்று!
காது கேட்கவில்லை!

!  குறி, ? குறியை பரிகசித்தது; இவருக்குப் பெயர்...
வளையாபதி!

எப்போதும் நிமிர்ந்தே,
இருந்த என் -
முதுகைக் கவனித்த;
? குறி, ஆச்சரியம்...
உற்றது!

வழக்கம் மறவா வலது கரம்;
தலை முடியை வருட,
முற்பட,
விரல்கள் தடுமாறும்;
நிலை உற்றது!

கடவுள் தந்த வரம்,
என்பதாக நம்பிட்ட...

அழகு  ஆடை அவிழ்ப்பு,
இளமைக் கொழுப்பு;
முழுவதுமாய் கரைந்து ...
தலை முடியும், நரைத்திட்டது!

`காதல் இலக்கணம்'
என் காதலி பெயர்!
எங்கே என்று அறிய,
மனம் தத்தளிக்கின்றது தினம்!

கண்ணீர் திரள்கின்றது!
தேகம் எங்கும் காய்ச்சல்,
புரள்கின்றது!

காலம் சிரித்திட்டது!
தேதியை...
தேர்வுச் செய்ய,
வெறுப்போடு நகர்ந்திட்டது!

கடவுள் இல்லவே இல்லை!
அவனேப் படைதிட்டதாக,
புலம்பிடும்  இந்த,
உடம்புக்குள்...
நோயும் நுழைகின்றது!

காதலி முகம், காணாமல்,
ஒவ்வொருநாளும்...
மரணமும்  நிகழ்கின்றது!

Friday 18 April 2014

கடவுள் நம்பிக்கை வீணே!

ஆண்டவன் ஒருவனாகிலும்
இங்கே வருவானா?
இந்த சாலையை ஆய்வுச்செய்து,
பதில் தருவானா?

இந்த சாலையை,
அமைக்கும் முன்னே - மானுடம்;
கடவுள் வணக்கம் செய்திட்டதே!

இருந்தும் மரண ஊருக்கு...
செல்லும் சாலையோ?
இப்படி நடுவழியில்,
உடைந்திட்டதே!

நீர்நிலைமேல் பாலம் என்றால்
மானுட தவரென்போம்;
வேறு இயற்கை சீரழிவு
நிகழ்வு இன்றி...

இந்தச் சாலைப் பிளவுற்றதே
இது பறையும்,
ஆண்டவன் பிழை ஆமோ?

ஓர் சீருந்து மரண பிளவுள்
புதையுண்டதே!
கடவுள் நம்பிக்கை
வீணே!



Wednesday 16 April 2014

 கவனி இனிநீ கவிதை அவனி!

கவனி இனிநீ கவிதை அவனி!
கவனம் கனிநீஎன்  கன்னி தமிழ்நீ!
புவனி மானுடப் பூநீ!

சொல்லச் சொல்ல இனிக்கும்,
அன்பு இலக்கணமே!
உன்னுள்...
செல்லச் செல்ல அணைக்கும்;
காதல் வனமே!

அள்ள அள்ள அவிழ்க்கும்...
ஆசை மலர்மனமே!
அகிலமொடு ஆகாயமும்
சுழற்ற சுழல, உடன்...
முயற்சியை மேற்கொள்;
 என் புவனமே!

நாளைய -
வில்ஸ் வேர்ட்ஸ் எம்,
ஒற்றுமை உலகம் - உன்
வலது கைவிரல் நுனியில்,
மலர்ந்து சுழலட்டும்!


-- Willswords M  Unity  world!
[http://willsinunityworld.blogspot.in]

Sunday 6 April 2014

சிவனின் கதையெனவே உன்விளை  யாடல் கற்பனைகள் ...


பிரம்மன் கதையெனவே,
உன்காதல் கற்பனைகள்;
உச்சியைத்  தொடுவதற்கு,
மேலே மேலே பறந்தேன்!

பிரபஞ்சம் கடந்தும்,
உச்சத்தைக் காண்கிலேனே!
இரவெல்லாம் உறக்கம் இல்லாமல்,
ஏக்கத்தில் தவிக்கின்றேனே!

சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...

பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன் சென்றேன்;
உன்நினைவுகள்,
ஆழம்தரை அறிகிலேனே






சிவனின் கதையெனவே, உன்காதல் விளையாடல்...


சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...

பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன், சென்றேன்;
உன் அன்பு நினைவுகள்,
அளவு, ஆழம், தரை எல்லை!அறிகிலேனே!