Friday, 2 September 2016

அதரம்அவிழ் சிரிப்பா? அழகுமுல்லை திறப்பா?

Photo

அலைகடல் அழைப்பா?
அசைநுரைத் தெரிப்பா?

இளமைவன கொடியிடை

இலை... காணும்,

நிலவுஒளி களிப்பா?

நீந்தும்நதி நினைப்பா?

அழகுமுல்லை திறப்பா?இவள் 

அதரம்அவிழ் சிரிப்பே!


மீனோ மானோ விழிமொழி...
மெல்லையிலே?
வானோ  வில்லோ மயங்கி...
வளைகையிலே?
தேனோ பாற்சோறோ அறியும்... 
சுவையிலே?
நானோ நீயோயார்  நச்சத்திரம் 
காதலிலே?

செக்கின் இடையே சிக்கிட்ட மணிலா...
வித்தின் நிலையில் விழிவழி கன்னி;
கொக்கோ கொத்த கொத்துற கண்ணுள்,
சிக்கிட   திணறிடும் மீனோ நானே!
Photo



No comments:

Post a Comment