Wednesday 20 June 2012

கோடரியின் தலைக்கனமும் விறகு ஒன்றின் மதிநுட்பமும்!

ஒரு சமயம் கோடரி ஒன்றுக்கு தலைக்கனம் வந்துவிட்டது; அன்றாடம் அந்தக் கோடரி, விறகு வெட்டி ஒருவன் காட்டிலிருந்து விறகுகளை விற்பனைக்காக வெட்டிக்கொண்டு வரும் விறகுகளிடம், அவ்வப்போது "கருங்காலிகள் உட்பட நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தது.

இப்படியே ஒருநாள் வழக்கம்போல் அந்தக் கோடரி விறகு வெட்டியின் தலையிலிருந்த கட்டைகளைப் பார்த்து, "நான் பார்க்காத கிளைகளில்லை; வெட்டிடாத மரங்களில்லை" என்றுப் பறைந்திட்டது (கூறிற்று).

அப்போது விறகுக் கட்டிலிருந்த ஒரு விறகு

"நீ ஒரே அடியாகப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்காதே; இதுவரை நீ வெட்டாத மரமும் ஒன்று உண்டு" என்றது. கோடரி யோசித்துப் பார்த்து முடிவில்...

"இருக்காது; கருங்காலிகள் உட்பட எல்லா மரங்களையுமே நான் பதம் பார்த்து விட்டேன்; இதுவரை எந்த மரமும் என்னிடமிருந்து தப்பியதில்லை; என்றுப் பறைந்திட்டது.

உடனே மேற்படி விறகு, புராணங்களில் புளுகியுள்ளது போல் பக்தர்களை சோதிக்கும் கடவுளாக இல்லையாதலால், கோடரியை மேலும் சோதனைக்குட் படுத்தாமல் "நீ இதுவரைப் (பதம்) பார்க்காத மரமும் ஒன்று உண்டு; அது எதுவென்றால் "வாழை மரம்" என்றுப் பறைந்தது! (தெரிவித்தது).

அதைக் கேட்டதும் பார்ககணுமே, கோடரி முகத்தை! பத்து லிட்டர்கள் பாத்திரம் வேண்டியிருந்தது; அவ்வளவு விளக்கெண்ணெய்; முதன் முதலாகப் பள்ளியறைக்குள் காலடி எடுத்துவைக்கும் புதுப்பெண் போல் நாணமுற்று விறகுக்கட்டிலிருந்து விலகி விறகுவெட்டியின் வீட்டிற்குள் சென்று வீட்டின் ஒருமூலையில் சோர்ந்து விழுந்தது.

மேற்கண்ட சிறுகதைக்கு அடிப்படையாக அமைந்திட்டது பின் தொடரும் சங்ககாலப் பாடல்.


வெண்பா

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
*இருங்காலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான்றோற்ற(து)
ஈரிரவுத் துஞ்சாதென் கண்.


- இப்பாடலைப் பறைந்திட்ட (ஓதிட்ட) நமது மூதாதையப் பாட்டிக்கு நன்றி.

*இருங்காலி மரம் - வாழை மரம்.

***

No comments:

Post a Comment