அவள்: பெண்னின் பிறப்பும் தேவையா? - அவள்
பிறந்திட துன்பம் தானம்மா!
தோழி: பெண்ணேவரும் தலைமுறை வேர்அம்மா!
பெண்மையே, உலகுக்கு உயிர்ப்பின் கரு அம்மா!
உலகம் இருக்கவும் வேணுமா? துயரம்
உருக்கவும் பெண் துன்புற வேண்டுமா?
இரவும் பகலும் இயற்கையம்மா? - பெண்ணுக்கு
இன்பமும் துன்பமும் வாழ்க்கையம்மா!
இன்பமும் துன்பமும் ஒரு வாழ்க்கையா!-இதில்
ஆண்களுக்குப் பங்கு இல்லையா?
ஆணிலும் நல்லவர் உண்டம்மா!- பெண்ணின்
அணைப்புக்குள் ஆண்மனம் குழந்தையம்மா!
துன்பம்தான் பெண்களின் தாலியா? - அதில்
துயரம் துன்பத்தின் தோழியா?
காலம் கனிந்திடும் பொறுத்திடம்மா - துன்ப
கோலங்கள் நீங்கிடும்நீ சிரித்திடம்மா!
No comments:
Post a Comment