காட்சி-1
கோயில் உள்ள ஊரில்...
பொய்யுரைகள் விதைக்கப்படும்;
புராணங்கள முளைப்பிக்கப்படும்;
பேதங்கள் கிளைகள் விடும்;
மோதல்கள் செழிக்கும்;
வறுமை அரளிகளாய்ப் பூக்கும்;
பசிப் பட்டினிகள் காய்க்கும்;
மானுட அவமானச் சின்னங்களாக,
பிச்சை எடுப்போர் அதிகரிப்பர்!
அதனால் –
கோயில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டும்!
இது ஞானியின்...
கனவு-அடிப்படை ஆயிற்று!
தத்துவமும் ஆயிற்று!
காட்சி-2
அங்கு...
கோயில்கள் ஏதுமில்லை!
ஆனால்,
மக்கள் குடியிருந்தார்கள்!
குருக்கள் என்று
ஒருவரும் இல்லை!
பல்லக்குகள் பாடைகள் ஆயின!
பிணமே போல்...
யாரையும் எதையும்
பல்லக்குகளில் தூக்கிச் செல்ல,
அவசியமும் இல்லை!
அதனால் –
விழா ஆர்ப்பாட்டகள் இல்லை!
பொருளாதார விரையங்கள் இல்லை!
மதச் சண்டைகளை உருவாக்கிட,
ஆட்களும் இல்லை!
மனிதம் ஒற்றுமைக்காக வளர்ந்தது;
அமைதிப் பூ விரிந்தது!
காட்சி-3
கடவுள்கள்...
காட்டுமிராண்டிக் காலத்திய –
செத்துப்போன அரசர்கள் என்பது,
அறியப்பட்டது!
பேதங்கள் சாக்கடைகளாய்
அகற்றப்பட்டன!
மக்கள் அநேகமாக,
நோய்வாய்ப் படுவதில்லை!
எந்தவொரு பிணியும்,
மருத்துவத்தாலேயே...
குணமாக்கப்பட்டது!
அதனால் –
தெய்வம் என்பது
சில, தமிழ் சொற்களேபோல்,
புழக்த்தில்
இல்லாமல் போயிற்று!
காட்சி-4
ஆண்மை பெண்மை துணையின்றி,
அறிவியல் முதிர்ச்சியினால்,
மானுடத்தை மட்டுமல்ல...
எந்தவோர் உயிரையும்
செயற்கையாகவும் உருவாக்க முடிகின்றது!
ஆனால் –
மனித நேயம் நோக்கில்,
அவ்விஞ்ஞான ஆய்வு
விளைவுகளை,
மருத்துவ ஆவணங்களில்,
மந்தனமாக (இரகசியமாக),
மற்றும் -
ஆராய்ச்சிப் பெட்டகங்களில்
கரு... பாதுகாப்பாக
வைக்கப்படுகின்றது.
|
Page-2
எதற்காம் ...
இனியும் ஒருமுறை –
உலகம், நீரால் மூழ்கடிக்கப்படும்பட்சத்தில்...
கூர்ம(பன்றி) அவதாரங்கள் போன்று,
புராணங்களை நம்பியிராமல்...
அவறிவியல் அடிப்படையில்...
அகிலம் முன்னம், சூரியனிடமிருந்துப்
பிய்ந்த காலத்தில்
நிகழ்ந்தார்போல்...
மானுடமாக,
உயிர்ப்பிக்கப்படும் பொருட்டு...!
மேற்குறிப்பிட்ட,
கரு... பாதுகாப்பு...
அன்றாட நிகழ்வு ஆயிற்று!
காட்சி-5
அதோ நமது சூரியன்
எரிந்து கருகிக் சிறுகிச் சிதறி...
தூசி மணடலம்,
ஞாலத்தை மூடுகின்றது!
இதோ... மனிதனால் உருவாக்கப்பட்ட
ஓர் செயற்கைச் சூரிய வளாகம்...
பனி மழைத் துகல்களொடு,
குளிர்ந்துச் சுழல்கின்றது!
காட்சி-6
அட... இன்று மானுடம்வாழ்வது...
(கனவு காணும் நம் ஞானி உட்பட),
எரிமலைகளாய் சிதறிட்ட,
பூமியின் பழைய –
தூசிப்
படலங்களைக் கொண்டு,
மனிதன் படைத்திட்ட –
அவனுடைய
செயற்கை நிலவில்!
காட்சி-7
அய்யகோ...! இஃது என்ன?
ஆழமாய் நில அதிர்வு,
மீண்டும் ஓர் சுநாமி...
சப்பானில்,
மறுபடியும் துவங்கி...
அணுஉலைகள் ஆங்காங்கே கசிந்து...
உலமெங்கிலும் –
மக்களின் மரண ஓலம்!
ஞானியின்அற்புதக் கனவு...
மானுட ஒற்றுமையே போல்
கலைந்தது!
கடவுள் இல்லவே இல்லை...
நிரூபனமாயிற்று!
|
Friday, 22 June 2012
ஒரு ஞானியின் கனவு அரசாட்சியில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment