Monday 18 June 2012

மனிதன் மரித்ததும் உயிர் எங்கே செல்கின்றது?

  
கணையால் (அம்பு) விழுந்த கனி!   (கணை எண் 2)


கேள்வி:            மனிதன் மரித்ததும் உயிர் எங்கே செல்கின்றது?


பதில்             வித்தி லாத சம்ப்ர தாயம் மேலு மில்லை கீழுமில்லை;
தச்சி லாது மாளிகை சமைந்த வாற தெங்கனே?
பெற்ற தாயை விற்றடிமை கொள்ளு கின்ற பேதைகாள்!
சித்தி லாத போது சீவ னில்லை யில்லை யில்லையே!


--  இவ்வாறு அறிவியல் அடிப்படையில் நமது முந்தையப் பாட்டனார் சிவ வாக்கியர் தமது ஞானத்தால் ஏற்கெனவே பறைந்துள்ளார் (ஓதி இருக்கின்றார்).


சித்து என்றால் உடல்; சீவன் என்றால் உயிர். என்வரையில் உயிர் என்றால் இயக்கம் மற்றும் இயங்கல்; மனிதனது சித்து அதாவது உடல் மரித்ததும் (உடலம் தனது செயற்படும் ஆற்றலை ஏதாவது காரணத்தால் இழக்கின்ற போது) உயிர் அதாவது இயக்கம் அல்லது இயங்கல் நின்றுவிடுகின்றது. மனிதனில் உயிர் அதாவது இயக்கம் பழுதடைந்தாலும் அல்லது நின்றுவிட்டாலும் அதனாலும், மனிதன் உடன்நிகழ்வாக மரித்துவிடுகின்றான்;


எனவே உயிர் என்று எதுவும் தனியாக உருவமாகவோ உறுப்பாகவோ இல்லை; மனிதன் மரித்ததும் அது புனைகதைகளாகச் சொல்லப்படுகின்ற சொர்கத்துக்கோ நரகத்திற்கோ பயணமாவதும் இல்லை.



முடிவுரை:  வைக்கப்படுவதற்குப் பெயர் - 'வைப்பு'; வார்க்கப் படுவதற்குப்    
                         பெயர் - 'வார்ப்பு';    பூக்கப்படுவதற்குப் பெயர் - 'பூப்பு; அவ்வாறே, 
                         இயங்குதலுக்கு அல்லது செயற் படுதலுக்குப் பெயர் - இயக்கம் 
                         மற்றும் இயங்கல் அதாவது  இயங்குதல்.

No comments:

Post a Comment