முகங்கவிழ் பருவம் எய்ய,
முத்தாரம் பையப் பைய,
அகமெலாம் ஆசைகள் நிறைய,
அத்தானின் மையலைக் கொய்ய...
கரம்பிடித்(து) இணையடி உன்றன்,
காட்டிலே, கற்கண்டு மழைதான் என்றார்;
இரும்பென அவர்பிடித் தோன்றும்,
இருந்தாலும்... தோழியர் தயங்கிட,
இரும்பென அவர்ப்பிடி ஆயினும்,
இனித்திடும் கரும்பும் என்றே
அரும்பென இவள்சிலு சிலுத்தாள்;
அனுபவி என்றே தோழியர்...
இளநகையொடு மெதுவாய்த் தள்ளிட,
இவள்நாணிக் கதவைத் தாளிட...
"எழுந்திடடி விடிந்திட்ட(து)" என்றே,
எழுப்பிட்ட அம்மா சொன்னார்...
வந்திட்டது தெருவில் தண்ணீரும்!
வா,நட நீர்ப்பிடி லாரியில் என்றார்;
கண்டிட்ட கனவு...உடன் மறந்திட,
கன்னியிவள் குடமெடுத்(து) ஓடினாள்!
Web site names/
Web site addresses1)Wills in Kavithai Chittu
2) Willswords English Twinkles http://willswordsindiatwinkles.blogspot.in
Thursday, 28 June 2012
கரும்பாய் ஒரு கனவு...ஆனால், கனவின் முடிவு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment