Wednesday, 20 June 2012

ஈழத்தின் கோலம்!

            From:     தாமிரபரணி - மார்ச், 1985 (தமிழ் திங்கள் ஏடு)



சிறுகுழந்தைப் பெரியவர்கள் பேதமில்லையே!
சிங்களத்தான் கொலைமனதில் இரக்கமில்லையே!
அரும்புமுல்லைப் பருவம்வந்து மலரவில்லையே!
அறிவிழந்தான் நெருங்கிவர கருகலானதே!


கண்ணகியின் வாழைத்தோப்புள் தீப்பிடித்ததே!
காட்டினத்தான் திமிர்ச்செயலால் இதயம்வெடிக்குதே!
பம்பரமாய் உழைத்தவர்க்கம் பரிதவிக்குதே!
பாவியினம் வெட்டஇரத்த(ம்) ஆறுஓடுதே!


பலநிறங்களில் அணிந்தசேலை சரிய லானதே!
*பவுத்தத்தின்மேல் நெருப்புவைக்க நெஞ்சுப் பற்றிஎரியுதே! கொலைக்களமாய் சிங்களமே காணத் தெரியுதே!
கொலையினந்தான் தமிழ்மரபை அழிக்கும் வெறியிலே!


பூக்கள்சிதற கொடிதனது கொம்பிழந்ததே!
பூட்டுடைத்தோர் கால்மிதிகளில் நசுங்கி மரித்ததே!
சேய்தனது தாய்முகத்தைப் பார்க்கத்துடிக்குதே!
சிறுநரிகள் புலிப்படையைச் போர்க்கழைக்குதே!


பாய்ந்துகொல்லும் சிங்கம்இன்னும் பாயவில்லையே - நாளும்
மேய்ந்துசெல்லும் காட்டெருமை வேகம் காட்டுதே! பார்முழுவதும் தமிழரெலாம் பதுமையான(து) ஏன்?
போர்புரிந்த வீரம்இன்று மண்மேல் உறங்கு(து) ஏன்?


ஆண்டவர்கள் சிங்களத்தில் அடிமையாவதா? - மானம்
பூண்டவர்கள் புழுக்களின்முன் மண்டியிடுவதா?
கருவழிக்க முடிவெடுத்து கொல்லும் வேளையில்,
கருஞ்சிறுத்தைக் கண்கள்மூடி கனவு காண்பதா?



*பெளத்தத்தின் மேல் - அன்புக்
கோட்பாடுகளின் மீது


தனி உரை:


அன்பை குளிநீரைப் போலவும்,
ஆசையை குடிநீரைப் போலவும,
தெம்பை கண்ணீரைப் போலவும் செலவழி!

No comments:

Post a Comment