Wednesday 13 June 2012

தங்கமோ விண்ணில்! பிளாட்டினமாய்...

             வெள்ளிஅணி பெண்ணே!

திங்கள் வரக்கண்டு செவ்வாயைக் கேட்டேன்!
தந்தநிறப் பல்விரிய, தங்கநிறப் 'பூ',தன்
மங்கைவர உடன்பட, வியாழனிடம் போஎன்றாள்!
தங்கமாய் அதுவிண்ணில்;
தருகின்றேன், வெள்ளிஅணி என்றான்;
நங்கை ஊடி, நாணி மனம்ஒன்றி,
''என ஒட்டாதே! இன்று'சனி' ஒவ்வாது...
நாயகா! ஞாயிறு அன்று வாஎன்றாள்!

தனிக் கவிதை:
    சிரிக்கும் விழியிமை தெளிக்கும் தமிழால்,
    தெரிக்கும் மதுவைத் திறக்கும் மலருள்,
    விரிக்கும் இதழ்கள் வெடிக்கும் நெடிமேல்,
    சரிக்கும் தொடர்கதைச் சரித்திரம் நீயே!

 

No comments:

Post a Comment