தனிப் பாடல்:
பாவைப் பூவை (என்னைப்) பார்என வைத்தாள்;
பாவைப் பார்வையில் (நான்) 'பா' வை வைத்தேன்;
பாவைப் பார்வை (என்மேல்) தைத்திட என்றன்...
'பா' வைப் பார்த்தாள் பார்வையில் சிரித்தாள்!
'பா' வை - பாடலை
கோழி முதலிலே! முட்டைப் பின்னரே!
பிஞ்சு விதைமு ளைத்திடா(து);குஞ்சு முட்டை இட்டிடா(து);அறிக முட்டைப் பொரியும்போது - உடன்வருவ தில்லை கோழியே!(குஞ்சுதான் வெளிப்படுகின்றது).பெட்டைக் கோழியுள் கருத்த ரித்தபின்முட்டை மஞ்சளும் அடுத்து வெள்ளையும்ஒட்டித் தோன்றமேல் ஒட்டும் சவ்வுமே,கெட்டிப்பட்டுப் பின்ஓடு ஆவதால்...பெட்டைக் கோழி முதலிலே,முட்டைக் குஞ்சுப் பின்னரே!முட்டைக் கருத்த ரிக்கவும் முட்டைமுழுமை யாகவும்;முட்டைக் குஞ்சுப் பொறிக்கவும்; முப்பதுநாள் ஆகுதே!முட்டை, கோழியிட்டபின் மூன்றுபத்து நாளிலும்,பெட்டைச் சூடு வேணுமே! குஞ்சுவெளி யேறவே!குஞ்சு முட்டைகள் இடா(து) என்பதால்;குஞ்சு வளர்ந்துதான், கோழி ஆவதால்!கோழி யாகியே... முட்டை யிடுவதால்,கோழி முதலிலே! முட்டைப் பின்னரே!
No comments:
Post a Comment