Monday, 11 June 2012

விரக்திகளின் விளைச்சல்கள்!




ஓடமே இல்லை;
     இந்த நதியும் மணல்திட்டு!

கவரவே இல்லை;
     இந்தப் பூவும் சருகு!

மேகமே இல்லை;
     எழில் வானமும் வீண்!

நெருக்கமே இல்லை;
     அவள் பாசமும் நெரிஞ்சில்!

அரவணைப்பே இல்லை;
எந்த ஒட்டுதலும் பிசுபிசுப்பு!

தவழவே இல்லை;
தவ மழலையும் சுமை!

ஒற்றுமையே இல்லை;
மதநம்பிக்கையும் சகாரா!

மனிதமே இல்லை;
மதவிழா ஆர்ப்பாட்டமும் மனநோய்!

சமத்துவமே இல்லை;
கடவுள் நம்பிக்கையும் இடர்!

பேத ஒழிப்புக்கு இல்லை;
எந்த கட்சியும் விரயம்!

பேதமே அடிப்படை;
இட ஒதுக்கீடும் வேற்றுமை வேலி!

தனிக் கவிதை:
     பண ஆசைகளின் நிகழ்வு!
பணமே, கொள்கைஎன்றுப் பாடுப்பட்டுச் சேர்க்கும்;
மனமே! மறையஉன்னைப் பின்தொடர்வ(து) என்ன?
குணமே தனமானால் குன்றிடும் துன்பம்
மனித! பணஆசை மற!

No comments:

Post a Comment