Wednesday, 6 June 2012

மானமிகு ஈழத் தமிழர்கட்கு சமர்ப்பணம்!



மானம் காத்த வீர மரணங்கள்!
(சிங்களத்தில் ஈழத் தமிழர்களைப் படுகொலை                          செய்யப்பட்ட நாளில் எழுதப்பட்டது)
-------------------------------------------------------------------------------------------

துள்ளி ஓடும் மான்களென தமிழா! தமிழா! - காலை
பள்ளி சென்ற மழலைகளைத் தமிழா! தமிழா!
சுள்ளி என அள்ளிவரத் தமிழா! தமிழா! - மாலை
கொள்ளி வைக்க ஆளில்லையே? தமிழா! தமிழா!

கோழியுளம் படபடக்கத் தமிழா! தமிழா! - குஞ்சு
கதறிஉயிர் மரித்தது.. ஏன்? தமிழா! தமிழா!
சேவலங்கு வருவதற்குள் தமிழா! தமிழா! - ஒரு
பருந்துவந்து தூக்கியதால் தமிழா! தமிழா!

மொட்டுமுல்லை மலருமுன்னே தமிழா! தமிழா! - அதன்
பட்டிதழ்கள் நிறம்மாறிய(து)ஏன் தமிழா! தமிழா!
கொட்டவனக் குளவிஇரண்டு தமிழா! தமிழா! - நஞ்சுப்
பட்டதனால் உடன்செத்ததால் தமிழா! தமிழா!

வாடிக்குயில் கூட்டி(ன்)உள்ளே தமிழா! தமிழா!
வழியக்கண்ணீர் கூவிடு(து) ஏன்? தமிழா! தமிழா!
தேடியிறைச் சென்றகுயில் தமிழா! தமிழா!
திரும்பிவர வில்லையடா தமிழா! தமிழா!

கூடுதிரும்பிய ஆண்குயிலை தமிழா! தமிழா! - ஒரு
கொடியஓனாய் கொன்றுவிட்டு தமிழா! தமிழா!
தேடுதுபார் பெண்குயிலை தமிழா! தமிழா! - அதை
சுடுவதற்கோ சமைத்துண்ணவோ தமிழா! தமிழா!

படர்ந்தகொடி கொம்பொன்றினை தமிழா! தமிழா! - முள்ளம்
பன்றிப்பத்து முட்டிமோதித் தமிழா! தமிழா!
பிடுங்கிஅதை முறித்தெறிய தமிழா! தமிழா!
பிரிந்தகொடி மடிவதைப்பார் தமிழா! தமிழா!

காவல்காத்த காட்டுப்பூனைத் தமிழா! தமிழா! - இளம்
மழலைப்பாலுள் தன்வாயை வைக்க தமிழா! தமிழா!
கோபம்கொண்ட புலிச்சிலிர்த்துத் தமிழா! தமிழா! - பாய்ந்து
கொன்று வேட்டையாடுது பார் தமிழா! தமிழா!

ஈழமண்ணுள் அமைதியில்லை..? தமிழா! தமிழா! – அதை
ஈடுசெய்ய தமிழ் குருதி தமிழா! தமிழா!
காவிரித்தாய் வறண்டுஏங்க தமிழா! தமிழா!
            கங்கைஆயத் தயங்கிடு(து) ஏன்? தமிழா! தமிழா!

No comments:

Post a Comment