Wednesday 25 July 2012

உலக அளவில் ஆங்கிலம், மாநிலத்தில் தாய்மொழி ...


Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper for publishing the verses on the date as shown below:
Wills in Kavithai Chittu
Chennai
7/22/2012 5:31:28
இந்திய தேசத்துக்கு, இரண்டு மொழிகள் போதுமே!

தமிழ்பழத்தைத்தனதாக்கி*தடிக்கிழவிமனங்குளிர,
அமிழ்தமெனத்தந்ததும்நீஅன்னியரைவென்றதும்;
தமிழ்நிலம்போல்மெய்யென்றால்சங்கத்தமிழ்முருகா! (எம்),
*உமிழ்தளத்தில்இந்திவந்(து) ஒண்டலாமோ? நிறுத்து!

இந்தியா? ஒன்றுபட்ட இந்திய தேசமா?
என்றிங்கோர்அய்யம்எழவோ? மொழித்திணிப்பு
தந்திரம்என்றாகும்தயங்காதே, மய்யமே!
இந்தித் திணிப்பை எடு.

இழிவின் துவக்க(ம்)எது இந்தித் திணிப்பே!
பழியைச் சுமக்காதே பாரதத்துள் வேற்றுமை!
ஒழிய வழிகாண் உடன்நிறுத்துபேதவெறி
நுழைக்க *நுணலாய் ஆகும்!

இந்திப் படித்தாலே எல்லோர்கும்வேலையுண்டென்(று)
அந்தகா ரத்துள் அமிழ்த்திடாதேதப்பிதமாய்;
சந்தர்ப்ப பேதமே! சாற்று வடவரிலும்
இந்திகற்றும்பட்டினிதான்ஏன்?

இந்திநு ழைந்திட்டால்இல்லைத்தமிழன்னை!
நம்புந வோதைய நஞ்சைநீ ஏற்றாயோ,
பின்னாள் தலைமுறை பெற்ற சுதந்திரத்தை
எங்கென்று கேட்பான் இழந்து!

அன்னை மொழியழிக்கும்அப்புறமாய்நீஅழிய
உன்னை அடிமைகொளும்ஒண்டவிடாதேயிது,
திண்ணைக் கதையல்ல; திக்கெட்டும்ஓங்கட்டும்...
இந்தித் திணிப்பின் எதிர்ப்பு!

அன்னியன்ஆ திக்கம் அண்ட வழியிரண்டுண்(டு)
எண்ணுக ஒன்றுமதம் இன்னொன்றுன்தாய்மொழியை
கொன்றிடும்பேதநஞ்சு; கொய்கஉடன்அவ்விரண்டும்,
என்றும் உலகுக்(கு) எதிரி.


*தடிக்கிழவி - அவ்வை மூதாட்டி
  உமிழ்தளம் - நாக்கு
  நுணல் - தவளை.
  Labele : Thanks: Dinakaran the Tamil E-Mail News Paper
   (Click Lable)

  Verse’s title :எதுவோ ஆதாரம்? தமிழே!
          

No comments:

Post a Comment