New:
ஒருவரின் காலம்கடந்த கனவு
காதல் புலம்பல்...
தங்கமுகத் தாமரைமேல்(வெண்)
சங்கிருக்கும்; - ரோசா
இதழ்களென இமைகள் தழுவி முறுவளிக்கும்!
இணைந்து சோடிக் கருநிலவைச்
சங்கமிக்கும்! - இதைக்
காணுகிற, சுவைஆப்பிள் கன்னங்கள்
பரிதவிக்கும்!
இமைவருடும் விழியிரண்டும்
- எப்போதும்...
எங்களுக்கே; நாங்கள் கண்களுக்கே
- என்று
தொங்கும்இரு ஆண்மீசையென விற்புருவம்,
மெலிதாய் இளைத்திருக்கும்
இணையாய் தவமிருக்கும்;
விடாது வணங்கி நோக்கும்!
விழிமீன்களுக்கு தன்னை யேத்தர மூச்சுவிடும் - மூக்கும்
பலாச்சுளையைப் பழித்திருக்கும்!
- அம்ம!
அதைத்தடுக்க இருகனிகள்...
கொவ்வை இதழிருக்கும்;
மெல்லப் பிளந்திருக்கும்;
வாய்உள் இருந்து
மெதுவாய் வெளியே, நாக்கும்
எகிறிப்பார்க்கும்!
பருத்தியாய் இளமையில் வெடித்து
மயக்கிய அவள்காதல் - இன்றும்
பருவத்தில் பூத்தவாறு எனக்குள் மகிழ்வதாலே
- அந்த
ஒருத்தியையே என்நெஞ்சுள் இருத்தி
என்னை இன்றுமட்டும் (காலம்),
உருவத்தில் முதுமையாக்கி வறுத்த முயன்றபேதும்
- கனவில்
விரித்திமைகள் என்னை விழுங்குவதோ,
அவளின் நினைவுகள்தான்!
விழுங்கிடும் அவளின் விழிகள் நகைப்பதின் பிரதிபளிப்பே!
- நீ
சிரித்திடும் அழகிலும் அவளின்
புன்முறுவலையே காண்கின்றேன் - நான்
திகைப்பது உன்னிடமா? அவளிடமா? தெரியவில்லை
திணருகின்றேன்!
|
Friday, 20 July 2012
ஒருவரின் காலம்கடந்த கனவு காதல் புலம்பல்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment