இருகரு விழிகளும் விழிவெண் படலமும்...
இரவிலும் பகலிலும் இடைத்தடை யின்றி
ஞாலம் சுழன்றால், அதுஒர் நாளாம்!
இருகரு விழிகளும் விழிவெண் படலமும் சரிவர
இமைகளும் இயங்கிடும் என்றால் கண்கள்!
கீழ்மேல் உதடுகள் பற்களும் சொற்களும்
நார்தசை நாவும், நன்றாய் அசைந்தால் வாய்!
பேதம்ஓதிடும் வேதமும் வாதமும்
விலகா வரையிலும் மரண ஓலங்கள்!
பழுப்பும் கருப்பும் நிறவெறி ஒழித்தால்
பதட்டம் மறையும் பாரும்* ஒன்றும்!
*உலகமும்
No comments:
Post a Comment