இளமை, மனைவி, இனிக்கும் மழலை,
பழகும் தமிழும், பாசம் பொழியும்...
அழகு விளையாடும், அன்பின் பிடிக்குள்,
உலகு...நீஎன்றே உறவுகள் ஒன்றும்;
இதமாய் குடும்பத்துள், இன்பம் குதிக்கும்;
கனியும் சுவையுமென காதல் செழிக்கும்!
சிதறும் இவையாவும்; தீய்கும்ஓர் நஞ்சாம்,
மதுவைத் தொடாதே! மறு.
குடலும் அழுகும்! குணமும் மறையும்!
தொட.. தொட.. கைகால் தொடைகள் நடுங்கும்!
அடிதடி சண்டை அமைதியை சிதைக்கும்!
அட... அட... வாழ்நாள் அளவும் குறையும்!
சதிபதி நேசம் சகதியைப் போன்று,
நிதமும் குழையும்;நிம்மதி சாகும்!
மதியைக் கெடுக்கும், மரணத்தைக் கொடுக்கும்,
மதுவை மனிதா மற!
No comments:
Post a Comment