Wednesday, 11 July 2012

மது, மாது இல்லை... மதுவை விடு!

        
            அவன்:


அமரா வதியாலே அம்பிகா(பதி) காதல்...


சமரே புரிய, சரித்திரம்ஆ னாளே!


அமரர்ஆ னாலும் அகிலம் மறவா(அத்)


தமிழ்மாதாய் தாங்குவேன் உன்னை!


அவள்:

தமிழ்மாதாய் தாங்குநீ என்னுள் மகிழக்


குமுதமாய்ப் மலர்ந்திட்டது குற்றமிலாக் காதலென்பதால்


சாதலும்சங் கீதம்! சரித்திர மும்வாழ்த்தும்;


ஆதலினால் காதலிப்பீர்; ஆசைகொள்அ ணங்கைமுன்னம்

*மாதில்;மதுவை விடு!


*மாதில் (மாது+ இல்),மாது இல்லை;
மது(வை)விடு.




No comments:

Post a Comment