Thursday, 19 July 2012

கண்ணற்ற ஓர் கன்னிப்பெண் புலம்பல்!



Love songs / Verses in English by Willswords M.     


                                             
கண்ணற்ற ஓர் கன்னிப்பெண் புலம்பல்!

விண்ணிலே வெண்ணிலா இல்லை;
மண்ணிலே மலர்வனம் இல்லை;
எண்ணினேன் எதனால் என்று;
கண்ணிலே கண்மணி இல்லை!

தினகரன் பகலிர(வு) இல்லை;
தினம்வளர்ந்தேன் நம்பிக்கை இல்லை;
வினவினேன் எதனால் என்று;
விழிகளுக்குள் ஒளியுணர்(வு) இல்லை.

பாதைகளில் பள்ளிகள் இல்லை;
பேதைப் பெண்பெருமை இல்லை;
பாடினேன் தெய்வமே! என்று;
பார்பதற்(கு) இறைவனும் இல்லை.

காதலன் கல்யாணம் இல்லை;
மாதுகை வளைத்தொட இல்லை;
மேதினேன் எதனால் என்று!
முறுவலிக்க வாய்ப்பே இல்லை!

விஞ்ஞானம் விழிதரும் என்றே,
வியாக்கியானம் செய்வோர் உண்டு!
கண்ணொளித்தர கடவுளும் இல்லை; (என்)
கவலைகட்கு மரணமே எல்லை!

 

No comments:

Post a Comment