Saturday, 14 July 2012

தனிமையில் ஏங்கிடும் ஒரு, பாசத்தின் புலம்பல்!



பெற்றவன்நான் முதுமைக்காலப் பிரிவில் ஏங்குகிறேன்!
பிள்ளைமனம் சுயநலத்தைப் பெரிதாய் எண்ணுதே! - அன்று
இளமைப்போது எப்போதும்என் அருகிருந் தானே! - இன்று
கிழவென்றோ என்னைவிலகி கிளம்பிச் சென்றானே!

நெஞ்சுள்அவன் வாழ்க்கைகுறித்துக் கனவுகண்டேனே - என்
நினைவுகளில் ஆசைகளை முறித்துப் போட்டேனே!
அவனுக்கும்என் அன்பைப் பற்றித் தெரிந்திருந்ததே! - இன்று
ஆதரவாய்(என்) முதியவயதில் அவன்-என்னோடு இல்லையே!

பாறைமீது பாசத்தில்என் பாட்டை விதைத்னோ?
பரிவுப்பூக்கள் கனியுமென்று பண்பு காத்தேனே! - நான்
சிதறிய வியர்வை தேங்கிஎன்னை வழுக்கி விட்டதோ?
முதுமைவலி முனகுகிறேன் கற்பாறைக்(கு)                                                       
                                                           அது-தெரியவில்லையே!

மேகத்துக்கு மெளனம்கெட்டுத் தூது விட்டேனே!
போன தென்றல் போய்த்திரும்பப் கேட்டுக்கொண்டேனே!
தாகம்எனக்கு தண்ணீர்தர மருமகளும் இல்லையே!
வானம்கூட என்நிலைமைக் குறித்து வருந்தவில்லையே!

இரவு எப்போது விடியுமென்றும் தெரியவில்லையே!
உறவை எண்ணும் உரிமை இல்லை;தனிமையாகினேன்!
விழிகள் உறங்க இமைகள் விழிக்க..மயக்கம்தாக்குதே!
மகனைப் பார்த்துத்தினம் மகிழ்வதன்றி (வேறு)                  நாட்டமில்லையே!


         Click -

No comments:

Post a Comment