Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper for publishing
the verses on the date as shown below:
| |
காதல் ஜாக்கிரதை!
|
Wills in Kavithai Chittu
Chennai
5/12/2012 11:8:29
|
காதல் ஒரு
தேனிறைக்கும் நிலவு!
நெருங்கினால்...
உருக்குகிற நெருப்பாறு!
காதல்...
அது, கானல் நீர்!
கண்களுக்குத் தெரியும்!
ஆனால் –
தாகத்திற்கு உதவாது!
காதல் –
ஒரு வர்ணஜால வானவில்!
அதற்கு...
வெளிச்சமும் வேண்டும்!
மழைத் தூவலும்...
வேண்டும்!
காதல் –
இளமைக் காலத்து...
விபத்து!
அந்த விபத்தில்,
பல வாலிப உள்ளங்கள்
தாஜ்மகாலைத்தான்...
கட்டுகின்றன!
|
ஏ! பூமியே!
விருப்பம் இல்லாமலா –
நீ வானம் பார்த்தாய்!
மேகம் –
பொழிய ஆவலுற்றபோது,
மறுப்புக் காற்றால்
மறுதளித்து விட்டாயே!
ஓ! சிறகடிக்கும் சிட்டுக்களே!
நீங்கள், கூடு கட்டுங்கள்!
அதில் –
குடியேறுங்கள்!
ஆனால்...
காதல் ஜாக்கிரதை!
By - திரு அ.கொ.மணிமொழி,
கவிதைச் சிட்டு
இலக்கிய இதழின்- தூண்.
|
Tuesday, 22 May 2012
Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment