Page-4
'ஆமாம்'
"ஆமாம் என்றால் எப்படி? உனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமோ?" அவன் எரிச்சலுடன் கேட்டான்.
"விருப்பம் என்றால் நான் ஏன் இங்கு என்னைத் தனியாக சந்திக்கும்படி உங்களுக்குக் கடிதம் எழுதுகிறேன்."
"ஆமாம் நீ என்னைக் காதலிப்பது தெரிந்தும், உன்னுடைய அப்பா வேறிடத்தில் மாப்பிள்ளைப் பார்திருக்கிறாரே! மாப்பிள்ளை உனக்கு உறவா?"
"அவர் எங்களுடைய மதப்பிரிவைச் சார்ந்தவராம்"
"ஆக, மதப்பிரிவைக் காக்க நம் காதலை தீக்கிரையாக்க இருக்கிறார்கள்"
"எனக்கு நீங்கள்தான் வேண்டும்"
"என்னாலும் உன்னை விலகிப் பிரிந்திருக்க முடியாது"
"ஆனாலும் என்னுடைய அப்பாவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது; அதேசமயம் இந்தக் கிணற்று நீரை எங்கிருந்தோ வரும் ஊற்றுத் தொட முற்படுவதற்கு முன், என்மீது ஆசைகளைத் தேக்கிவைத்திருக்கும் உங்களது தாகத்தைத் தீர்க்கவிருமபுகிறேன்; எனக்குப் பிறக்கின்ற முதற் குழந்தை உங்களுடையதாக இருக்கட்டும்."
"நீ சொல்வது நம் பண்பாட்டை மீறுவதாக உள்ளது; தாலி கட்டுமுன் இந்தமாதிரி..."
"வகுப்புப் பேதங்கள் புதிய தலைமுறையினரின் காதலுணர்வுகளை கொல்ல முற்படுகையில், அது விபச்சாரமாகின்றது; பண்பாடு என்பதும் அதில் களங்கப்பட்டு விடுகிறது; மேலும், உங்கள் மீதுள்ள காதலுணர்வுகளைத் தோழி ஒருத்தி மூலமாக என்னைப் பெண்பார்க்க வந்தவரிடம் தெரியப்படுத்தியும், என்னுடைய பெற்றோர் தருவதாகச் சொன்ன வரதட்சணை மீதான பேராசைக் காரணமாகத்தான் அவர் என்னை மணக்கவிருக்கிறார்; அவர் இல்லாதவரும் அல்ல; இந்தநிலைமையில் அது எப்படி இருவரும் விரும்பும் களங்கமில்லா திருமணம் ஆகும்?"
சிந்தனை அவனை, சற்று நேரம் ஆட்சி செய்தது.
ஒரு முடிவுக்கு வந்துவிட்ட அவனது ஆசைவழிகள் அவளது ஏக்க விழிகளுக்குள் புகுந்துகொண்டன; அவனது ஆசை விழிகளை ஏற்றுக்கொண்ட இவளது ஏக்க விழிகள் சிறிது சிறிதாக அவற்றுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டன; காதல் மொட்டுக்கள் இரண்டும், வகுப்புப் பேதங்களை காணான் தேசத்துக்குள் ஓடவிட்டன; அவன் தன் கையோடு கொண்டுவந்திருந்த தூக்க மாத்திரைகள் இருவரையும் சிறிது நேரத்தில் நிரந்தரமாக உறங்கும் படிக்குக் கடமை ஆற்றின! மலர்ந்து மணக்கும் முன்னமே மரணமடைந்தவை, அவ்விரு காதல் மொட்டுக்களா? இல்லை காதல்!
|
Sunday, 27 May 2012
தயக்கம் தந்த மயக்கம்! மயக்கம்! (Part-II // Page-4)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment