தயக்கம் தந்த மயக்கம்! மயக்கம் தந்த விளைவு...? (Part-I)
பூமத்திய ரேகையின் மீது அமைந்திருந்ததேபோல், வறுமை சித்திரை மாத வெய்யிலாய் ஜானிடேவிட் குடும்பத்தை வாட்டிக்கொண்டிருந்தது. அதனால், ஜானிடேவிட் அவ்வாண்டு +2 தேர்ச்சிப் பெற்றிருந்தும், படிப்பை மேற்கொண்டு தொடர குடும்பச் சூழ்நிலை இடம்தராததால், தட்டச்சுப் பயிற்சியில் தன் விரல்களைப் பழக விட்டுக்கொண்டிருந்தாள். சுருக்கெழுத்துக் கற்றுக் கொள்வதை எதிர்த்தவீட்டு விண்ஒளி மூலம் இலவசமக்கிக் கொள்ள விரும்பினாள். விண்ஒளி நகர அரசு அலுவலகம் ஒன்றில் சுருக்கெழுத்துத் தட்டசசராகப் பணியிலிருந்தான்.
ஆண்பிள்ளைதான் என்றாலும் கூச்சம் விண்ஒளியை, குத்தகைக்கு எடுத்திருந்ததால், ஆரம்பத்தில் தயங்கச் செய்தது. ஆனால் ஜானிடேவிட்டின் பெற்றோர் வற்புறுத்திக் கேட்டுக்கொள்ள, அவன் அவளுக்கு இலவச பயிற்சி ஆசிரியர் (இன்ஸ்ட்ரக்டர்) ஆனான்.
நெருப்பும் பஞ்சும் அருகருகே இருக்க, நாட்கள் மாதங்களாயின. அவள் முன்னிலையில் ஆரவாரமின்றி உதித்த காதல் உணர்வுகள் மெல்ல மெல்ல கூடுகட்டி ஆசை குஞ்சுகளைப் பொறித்தது. அவனைப் பற்றிய இன்ப எண்ணம் அவளின் இதயத்தில் ஆலாகி விழுகள் விட்டன. வெய்யில் பட்ட பனித் துளிகளாய் அவளது இளமை மையங்களின் முன்னால் அவன் அடிக்கடி உருகிப்போனான். அவனைப்பற்றிய எண்ணங்களில் அவளது வில்லியாய் உறக்கம் அவளிடம் பகைமைப் பாராட்டியது.
அவள் தன் மலையளவு ஆசைகளை வெளிப்படுத்த நினைத்த போதெல்லாம் அவளோடு இருந்த நாணம் நிலைகொண்ட பனி மூட்டமாக மூடி மறைத்துக்கொண்டது. இவனது இதயத்திற்கு அவளது இனிய கனவுகள் முடிவே அறியப்படாத அண்ட சராசரத்தின் எல்லை ஆயிற்று. அவன் தன் காதல் நினைவுகளை அவளுக்கு வெளிப்படுத்த நினைத்த நேரங்களில் எல்லாம் அவனோடிருந்த அச்சமும் கூச்சமும் அவ்வப்போது நிலவை மறைக்கின்ற மேகங்களாகின. ஒருவரை ஒருவர் காதலித்தது பலமாதங்களாக இருவருக்குமே தெரியாமல் போயிற்று.
இந்நிலையில் ஒருநாள் அவனது கை தானாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டது. அவனது காதலை அவளுக்கு, 'ஐ லவ் யூ' என்று சுருக்கெழுத்தில் தெரிவித்தது. அது, ஓரளவு அவள் சுருக்கெழுத்தில் பயிற்சிப் பெற்றிருந்த நிலையில் அவளுக்குப் புரிந்தது. இத்தனை நாள் அவன் பாராதபோது மட்டும் அவனுடைய முகத்தைத் திருட்டுத்தனமாக ரசித்துக் கொண்டிருந்த கள்ளிவிழிகள் இப்போது அவன் பார்க்க அவனுடைய வெல்ல விழிகளை நேரடியாகவே மெல்லக் கிள்ளி விளையாடின.
அப்போது பார்த்து விளக்கை காற்று அணைக்க, ஒளி காணாமல் போயிற்று. அவனும் அவளும் தனி அறையில்; இருள் அவர்கள் இருவருக்கும் போர்வை ஆயிற்று. சுருக்கெழுத்துக்களில் விளையாடிய அவனுடைய விரல்கள் இப்போது அவளது கரங்களை வருட முயற்ச்சித்தன. அவனது எண்ணம் தெரிந்து அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ள அவளின் மனம், தீப்பெட்டியைத் தேடியது; தீப்பெடடியோ தன்னுடைய இருப்புக்களைத் தீர்த்துவிட்டிருந்தது. வேறு வழியின்றி இப்போது அவள் அவனுடைய கைகளில்...
'ஜானி'
'ம்'
"இருட்டுக்கு வணக்கம் சொல்லவேண்டும்"
'எதற்கு?'
"நல்ல சகுனமாக அமைந்ததற்காக"
"இருட்டு... நல்ல சகுனமா?"
'ஆமாம்'
'எப்படி?'
"நாம் ஏதாவது ஒரு காரியத்தை நினைக்கும் போது, பல்பு எரிந்தால் (விளக்கு வெளிச்சம் வந்தால்) நல்ல சகுனம் என்று சொல்வார்கள் அல்லவா?"
'ஆமாம்'
"அது போல் காதலுக்கு இருட்டு நல்ல சகுனம்"
'புரியவில்லையே'
"சிறிது நேரத்திற்கு முன் என் கை 'ஐ லவ் யூ' என்று எழுதியதா?"
'ஆமாம்'
"அதை நீ ஏற்றுக் கொண்டாய் அல்லவா?"
"நான் எப்போது அதை ஏற்றுக் கொண்டதாகச் சொன்னேன்"
|
Sunday, 27 May 2012
சிறுகதை - தயக்கம் தந்த மயக்கம்! Pages 1 & 2 (Part-I)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment