தோழி: கன்னத்தில் கையை வைத்தாயே!
ஏன் உன், கப்பல் கவிழ்ந்து விட்டதா?
தலைவி: கப்பல் கவிழ்ந்திருந் தாலும் பரவா-யில்லையே!
நான் என்றன், காதலில் தோற்றுப் போவேனா?
காதல் தோழ்வியில் என் வாழ்வே...
வீணென்ற தூற்றல் துயர்தருமோ?
காதலில் தோற்றுப் போவாயோ? ஏன்உன் காதலன்...
கைப்பற்றும் நினைவை விட்டானா?
உன்னைக் கைகழுவி நழுவிப் பேனானா?
கைப்பிடிக்கும் எண்ணம் உண்டுதான்! காதலன் மலரைத்
தினம்தினம் நாடும் வண்டுதான்,
மணமகளாகத் தட்சணை - உன் காதலன் பெற்றோர்...
தரவேண்டும் என்றே சொன்னாரா?
அந்தக் காரணத்தாலே உன்காதல் வெல்லவில்லையா?
சீர்சிறப்பில் ஆசை இல்லையே! - அத்தை மாமா
இச்சிலையின் மீதம் உள்ளது பாசமே!
கவலைகளே என்பெற்றேர்கள் தானே –
அவர்களைத் தொற்றிட்ட... மதம் வகுப்புப் பேதங்கள் தானே–
நம் இருவரையும் போல் - யாவரும்
இந்தியர் என்னும் பற்று இல்லையே!
கன்னத்தில் கையை வைத்தாயே!
ஏன் உன், கப்பல் கவிழ்ந்து விட்டதா?
கப்பல் கவிழ்ந்திருந் தாலும் பரவா-யில்லையே!
நான் என்றன் காதலில் தோற்றுப் போவேனா?
No comments:
Post a Comment