Sunday 27 May 2012

சந்திரன் பிறையாகின்றான்! எதனால்?

Thanks:  Dinakaran, the Tamil  E-Mail News Paper for  published the verses on the dates as shown below:
(Part-III)


Wills in Kavithai Chittu
Chennei
5/15/2012 20:0:31

பாவம்பேய் புண்ணியம் பல்லிகிளி சோதிடம்!
காவுபலி  பூசை கடவுள் விதிலீலை                           தேவருல கம்நரகம் தீண்டாமை சொர்க்க(ம்) இவை                 யாவும் அயோக்கியர் கொல்கை!













Wills in Kavithai Chittu
Chennai
5/17/2012 3:13:26
சந்திரன் பிறையாகின்றான்! எதனால்?

வட்டிக்குக் கடன்வாங்கி வரவேதும் காணாது,
வட்டி செலுத்தவும் வழியேதும் தெரியாது,
வட்டியைக் கட்டவே வாங்கிக் கடன்மீண்டு(ம்),
செத்திட்ட மனிதன்போல்தேயுதே!விண் நிலவும்ஏன்?

மங்கைஅறி யாமல் மதியிருந்தும், கங்கையினை;
வெண்நீரான் தன்சிரம்மேல் வீற்றிருக்கச் செய்தவளைப்
பின்னி மகிழப் பிறையாகி னானோ?
நம்,சந்திரனும் கண்ட தனை!

சொந்தத்தில் சொக்கனுக்கோர் சொக்கும்விழி யாளிருக்க
அந்தரங்கக் காதலியாய் ஆடுசிவன் செஞ்சடையுள்
கங்கையையும் வைத்துக் கலந்திடக் கண்டேங்கி
இந்துபிறை யானானோ தேய்ந்து!

இந்துசடை மேலிருக்க இங்கிதமே இன்றிசிவன்...
கங்கை யினைச்சீண்டி கண்டபடி தன்சடையுள்,
அந்தரங்க மாய்முயங்க அம்ம... அதைப்பார்த்தே,
இந்துப் பிறையானான் ஏங்கி!

நாணம் மறந்திட்ட நங்கைப்போல் கங்கையினை
வானம் தொட்டசிவன் வார்ச்சடையுள் வைக்க,மதி
தானும் இறங்கிஅவன் தார்முடியை ஒட்டிநின்று
கோணக் குறையானா னோ?

தனிக் கவிதை:

சடைசிவன்மேல் ஏறினாய் சந்திரா கீழிறங்கென்,
இடைதுடித் தேங்கு தடி!


Wills in Kavithai Chittu
Chennai
5/17/2012 4:17:29
நிலாவென்னும் புவியின்தோழி, பலாஒளி மெருகுடன்...

பகலென்னும் மணநிகழ்வு பலர்வாழ்த்த முடிந்தவுடன்...
அகல்ஒளிரும் முதலிரவாய், அவ்விரவு அமைந்தினால்;
வானென்னும் மணஅழகன், மணமகளாய் நிலப்பெண்ணை;
தேனென்னும் மழைக்கரத்தால், தீண்டுகையில் அந்நேரம்;
நிலாவென்னும் புவியின்தோழி, நீக்கிமுகில் வெளிப்பட்டு;
பலாஒளி மெருகுடன்தன் பருவமுகம் காட்டிவிட...
பாவம்நாணி வானழகன், பனிக்கரத்தை விலக்கிக்கொள்ள;
கோபமுற்ற புவிப்பெண்ணோ, குமரிநிலவைப் பார்க்க (முறைக்க)     திகிலுற்றதாய் நடித்தநிலா தென்படாது அங்கிருந்து;
முகிலென்னும் துகில்திரையால் முகம்மூடி உடன்மறைய...
காதல்வானன் விளையாட்டு, கவிபுவியுடன் தொடர்ந்ததம்மா!
ஆதலினால், என்எழுதுகோல் அதைஎழுதாமல் விலகுதம்மா


Wills in Kavithai Chittu
Chennai
5/15/2012 20:47:47
My brain never sleeps!

My heart’s eager to go up, upon Mountains’ peaks!
I aim to jump down, from mist snow’s chills!
Then wish to run into, river valley fields!
But Noon fire throws, hot on the scenes!

Oh! My Snow beauty, carry me along with you;
My breathing yet continues, because of you;
Before my life’s end, I would see you;
Where are you darling? Living days are few!

To-day I am singing, like a mad of you!
All hear my verses, through air except you!
Where do you be, Oh! Honey view!
My brain never sleeps, because of you.

Wills in Kavithai Chittu
Chennai
5/25/2012 2:35:10





உணர்வுச் சூரியன்
                 உதிக்கின்ற போது...

நெருப்புக் கணவன்
தொட்டதும் உடனே...
தழுவிக்கொள்பவள்!
செல்லப் பெயர்தான்
மெழுகுவர்த்தி!
உண்மைப் பெயர்
உருகும் பத்தினி!

பட்டுக்கள்தான்
வேண்டுமென்றார்கள்!
கொடுத்தால்... பாவிகள்
உயிரோடு சாகடித்து நூலெடுக்கிறார்களே!



கற்பு கசாப்புக்காரன்
காதலித்து வெட்டுகிறான்!
ஆடுகளோ...
கதறாமல் மடிகின்றன!

வெண்பனித் துகிலினுள்
எரிமலைகள்!
உணர்வுகள் மட்டும்…
நீறு பூத்தன!
திரி இல்லை!

அதனால்...
மெழுகு உருகவில்லை!
வெளிச்சம் படரவில்லை!
உணர்வு சூரியன்
உதிக்கின்ற போது...
மரபு இருள்... மறையும்!

No comments:

Post a Comment