ஈர..இசை கேட்டேன் ஈயாமல் கண்வழியே...
அவன்: அக்கா மகளைத் பார்ப்பதற்கு
அந்தியிலே வந்தேனே!
செக்கா என்னைச் சுழற்றுகின்றேன்!
சேவிக்க முடியலையே!
அவள்: சும்மாநீயும் வந்தாக்க...
அக்காமகள் கிடைப்பாளா?
கிம்பளமும் பரிசுஎன்று
ஆகிவிட்ட காலத்திலே!
ஓகோ..கோ, அப்படியா? நான்
உண்மை அறியவில்லை
இந்தா ஈர இசை...!
ஏற்று உன்னை ஈவாயே!
ஈர இசையா...? அப்படீன்னா?
இச் என்ற இசையோடு
இதழீரம் உடலெங்கும்
பதிவதுதான், ஈர இசை!
அக்காமகள், முத்தம்... அறியாளோ?
அம்மன் என்னுள் புகுந்துவிட்டாள்; அப்படி
மாமா என்னை மச்சினிபோல் பார்க்காதே!
இப்போது நீ, போய்வரலாம்!
அம்மன் மலை ஏறியதும் - உனக்கு
அக்கா மகள் கிடைப்பாளே!
(2)
ஈர இசைகேட்டேன் ஈயாமல் கண்வழியே,
சேரும் நினைப்பில் சிரித்திட்டாள் - சாருவழி
நாவால் இதழை நகர்த்தி இமைமூடி
ஆ!வா, அணை...இசை, என்றாள்!
|
Monday, 21 May 2012
ஈர..இசை கேட்டேன் ஈயாமல் கண்வழியே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment