Page-3
தயக்கம் தந்த மயக்கம்! மயக்கம் தந்த விளைவு...? (Part-II)
இது இப்படி இருக்க, சிலரை லட்சாதிபதிகள் ஆக்கிவிட்டு (இக்கதைக் காலம் 1972) லட்சக்கணக்கானவர்களை பேராசை காரணமாக சிறுக சிறுக ஏழைகளாக்கிக் கொண்டிருந்த லாட்டரி டிக்கெட்டுக்களில் ஒன்று ஜானி டேவிட்டின் தகப்பனாரை 50 லட்சங்களுக்கு அதிபதி ஆக்குகிறது.
முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஜானிடேவிட்டின் பள்ளி வாழ்க்கை, 'கமா' ஆகின்றது. கோவையில், கல்லூரியில் சேர்ந்த மறுநாளே ஜானியின் காதல் உணர்வுகள் விண்ஒளியின் அலுவலகம் வரச்செய்தது.
பிரிந்தவர்கள் சங்கமிக்கிறார்கள்; அவர்களின் சங்கமத்தொடர் மறைந்த எழுத்தாளர் சாண்டில்யனின் முடிவுறாத கதை ஆயிற்று. திருவள்ளுவரின் காமத்துப்பால் தினந்தோரும் அவர்களிடையே பிசிரின்றி அரங்கேறிற்று. ஆனால் அந்த இனிய நனவுகள் விரைவில் உடைந்துவிடுகின்ற அழகிய நீர்குமுழியின் ஆயுளாய் மடியவிருப்பதை அவர்கள் இருவரும் அறிவார்களா என்ன?
ஆம்! ஜானி டேவிட் குடும்பத்தினரின் வறுமைக் காலத்தில், தூரமாய் விலகி இருந்திட்ட நெருங்கிய சொந்தங்களை, அய்ம்பது லட்ச ரூபாய் லாட்டரிச் சீட்டு ஞாபகப்படுத்த, நாள்தோரும் ஒவ்வொருவராக ஜானியின் வீட்டுக்கு அவளைப் பெண்கேட்டு வந்தனர். பழமைவாதிகளின் பேத உணர்வுகள் ஜானியையும், விண்ஒளியையும் பிரித்துவைப்பதில் வேகம் காட்டியது. ஊருக்கு வந்து சேரும்படி காரணம் குறிப்பிடப்படாத கடிதம் தகப்பனாரிடமிருந்து ஜானிக்கு வருகின்றது.
அவளுடைய பெற்றோர்களால், முன்னறிவிப்பின்றி அவளுக்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதி அவளை அதர்ச்சியடையச் செய்தது. ஒரு சிறுவன் (அவளுடைய சித்தப்பார் மகன்), அரசு விடுமுறையில் அன்று ஊருக்கு வந்திருந்த விண்ஒளியிடம் தூது சென்றான். அவனும் அந்தச் சிறுவன் மூலம் கிடைத்த கடிதத்தில் குறிப்பிட்டபடி ஊருக்கு வெளியே தென்னந்தோப்பிற்குள் தன்னைக் கொண்டுசென்றான்.
அங்கே அவனுக்காக அவள் காத்துக்கொண்டிருந்தாள். சற்று நேரம் அவனையும் அவளையும் மெளனம் அடைக்காத்தது. அவள் கண்கள் கோடைக்கால தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய விழைவதுபோல் தவித்தது. அவளது கைவிரல்களில் இரண்டு (வலதுகை ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டும்) கன்னத்தில் வழிந்த கண்ணீரை தொட்டு துக்கத்தில் பஙகெடுத்தன.
அவனே முதலில் பேசத் தொடங்கினான்; "உன் தம்பி தந்த கடிதத்தைப் பார்த்தேன்; உன் திருமண அழைப்பிதழையும் பார்த்தேன்." அவள் பதில் பேசவில்லை, மீண்டும் அவனே பேசினான். "கிணற்று நீரை, ஊற்று நீரா ... மொண்டுச் சென்றுவிடப் போகிறது." என்று உன்னை நான் நெருங்கிடும் நேரத்திலெல்லாம் ஏதாவது காரணம் தெரிவித்துத் தட்டிக் கழிப்பாயே...?" அவள், 'இம்' கொட்டினாள்.
"இப்போது ஒரு ஆற்று வெள்ளம் அதற்குக் தயாராகிக் கொண்டிருக்கின்றது. காத்திருந்தவன் கனியை நேற்று வந்தவன் பறிக்க முயல்கின்றான்."
|
Sunday, 27 May 2012
சிறுகதை - தயக்கம் தந்த மயக்கம்! (Part-II // Page-3)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment