Saturday 19 May 2012

சேலையணிச் சிற்பி சிலையே!



            சேலையணிச் சிற்பி சிலையே!

சோலை எனஅசைந்து தூதுவிடும் கோதையே!
வேலையிலைத் தேடிஊரை வெட்டியாய் சுற்றுகின்றேன்!
நாளை அதுகிடைத்தால் நச்சுவேன்! கோபம்ஏன்?
சேலையணிச் சிற்பிச் சிலையே!


- இந்தக் கவிதையில் உள்ள 'நச்சுவேன்' என்ற சொல்லானது 'நச்சரிப்பேன்' என்பதின் சொற்சுருக்கமாகும். நச்சரிப்பேன் என்பதற்கு 'தொந்தரவு செய்வேன்' என்பது நடைமுறைப்படி பொருள். ஆனால் வேறு அர்த்தங்களும் உண்டு. அது, 'விரும்புவேன், ஆசைப்படுவேன்' என்பனவாகும்.


                             நச்செழுத்துக்கள்!


தமிழ்மொழியில், 'நச்செழுத்துக்கள்' என்று ஒரு சிறுபகுதி உண்டு; அவை முறையே - "யா, யோ, ரா, ரோ, லா, , ர், ல் - இவை ஏழு நெட்டுயிரும் ஆயுதமுமாம்.
                                                                                                 (ஆதாரம்: கழகத் தமிழ் அகராதி).

'நச்சு' என்றால், விரும்பு; நச்செழுத்து என்றால் 'விரும்புகிற' அல்லது, 'விரும்பப்படுகின்ற' எழுத்து ஆயிற்று.

ஆனால் பேச்சு வழக்கில் நச்சு (எழுத்து) என்பதற்கு (நஞ்சு, -ம், நச்சு மரம்; அதனால்) நச்சுத் தன்மையுடன் கூடிய எழுத்து என்பதும் பொருளாய் இருக்கின்றது.

மேற்காணும் எழுத்துக்கள்

தமிழ் மொழியின் தனித்தன்மையைக் கட்டிக் காப்பதாலா? தமிழ் மொழியில் இனிமை சேர்கும் எழுத்துக்கள் என்பதாலா? உச்சரிப்பதற்கு வெகு எளிதாக இருப்பதாலா? வடமொழி சொற்களுக்குள்ளும் இவ்வெழுத்துக்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக உணரப்படுவதாலா? அல்லது இவ்வெழுத்துகள் வடமொழிச் சொற்களுக்குள் முதன்மையாக இருந்து ஆதிக்கம் செலுத்த வில்லையே என்கின்ற ஏக்கத்தாலா? இல்லை, தாக்கத்தாலா? மற்றும் வடமொழி ஆதிக்கப் பிரியர்களின் தமிழை முற்றுமாய்ச் சிதைக்க உணர்வடிப்படையில் முயன்று நூறு சதவீத வெற்றி பெற முடியாமல், தோற்க, இவ்வெழுத்துக்கள் தடையாய் இருப்பதாக முடிவு செய்திட்டதாலா? அதனால் மேற்கண்டவாறு நச்செழுத்துக்கள் என்று குறிப்பிடப்படடனவா?

தமிழ்மொழி ஆராய்ச்சியாளர்கள், அல்லது விவரம் தெரிந்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன், அடியிற்காணும் 'Comments Box' - ல் நிரப்புங்களேன்! நீங்கள் அளிக்கின்ற விளக்கம் தமிழின் மேற்கொண்டு, Wills in Kavithai Chittu தரப்பில், மொழி ஆராய்ச்சிக்கு உதவக் கூடும்.




No comments:

Post a Comment