Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper for publishing the verses on the dates as shown below:
| ||
Wills in Kavithai Chittu
Chinnai
4/5/2012 7:11:32
The Universal Effects and such as a Love verse! (A less portion)
என் கவிதைப் பிரளயமே!
ஒளியின் வேகமோ...
நிமிடத்திற்கு,
ஒரு லட்சத்து
எண்பத் தாராயிரத்து
இருநூற்று
எண்பத்து ரெண்டு புள்ளி
முன்னூற்று தொன்னூற்றேழு
(1,86,282.397) மைல்களாம்!
அம்ம...!
என்னை ஊடுருவி நோக்கும்
உன்றன் பார்வையின் தாவலோ...
பாய்ச்சலின் வேகமோ...
அது, அறிவியல் –
ஒளிவேகக் கருவி கொண்டும்,
அளந்து... நிர்ணயிக்க இயலாது!
ஒரு அனுமானமே!
பல நூறாயிரம் ஒளி ஆண்டுகள்!
(ஒரு ஒளி ஆண்டு பல நூறாயிரம்
- 5.88 மில்லியன் மில்லியன் மைல்களாம்???)
பிரபஞ்ச மையமே!
சூரிய குடும்பமே போல்...
நானும் – உன்னை விட்டு...
முப்பத்து மூன்றாயிரம்
ஒளி ஆண்டுகள்
தொலை தூரத்தில்... விலகி,
ஒரு மூலையில் –
மின்மினிப் பூச்சிபோல்
சுற்றுவதாய் உணர்கின்றேனே!
எனக்கும் உனக்கும்
எதற்கோ...
இந்த இடைவெளி!.
Thanks : Dinakaran Published on: 03.4.2012பெண் என்பவள்...!
கருவாகி, உருவாகி, காலத்தில், சிசுவாகி;
மெருகாகி, மெருகாகி, மகரந்த மலராகி ;
பருவத்தில் கனியாகி, பாயாகி, தாயாகி;
உருகிக் கிழமாகி, ஓர்நாளில் மறைகின்றவள்!
கதிரவனில் பிண்டுப் பிரிந்ததேநம் பூமி!
A Scientific reality...
அண்டத்து தூசியெலாம் அன்றோர்நாள் ஆங்காங்கே
குண்டுகுண்டாய் மோத குவிந்த அணுத்திரல்கள்
திண்டுதிண்டாய் சீற தெரித்த கதிரவனில்
பிண்டுப் பரிந்ததேநம் பூமி!
Thanks : Dinakaran for published through the
Tamil Daily E-Mail News, 31.3.2012
Wills in Kavithai Chittu
Chennai
4/1/2012 8:9:1
All born Organisms, were nature;
Said lies will not guard future.
Believe brain scientists should save Earth;
If not nobody will keep health!
By farmers’ field works, we got food;
So, many should fight, daily with mud.
Then all will live, if have breath;
Otherwise die; and never more birth!
Since, Nature had made
The sun and full moon;
Air, water as such
Each on our world…
For all cells and living lives
As power shields! Thus world is one;
So, countries should be united...
In a war left and... Scientific round!
Thanks : Dinakaran for published through the
Tamil Daily E-Mail News, 31.3.2012
Thanks : Dinakaran for published through the
Tamil Daily E-Mail News, 31.3.2012
கோழியா... முட்டையா... எது முதலில்?
முட்டைக் கோழி யுள்கருத் தரித்தபின்...
முட்டை மஞ்சளும் முட்டை வெள்ளையும்,
ஒட்டித் தோன்ற,மேல் ஒட்டும் சவ்வுதான்,
கெட்டிப் பட்டுப்பின் ஓடு ஆவதால்...
முட்டைப் பின்னரே; கோழி முதலிலே!
இதனை –
"தந்தைத் திரவ விந்துளே தாவி என்றன் உயிரணு,
அன்னை ஈன்ற முட்டையுள் அன்புமிக உட்புக ...
சொந்தமாக்கி தன்வயிற்றுளே(என்)
தொந்தரவைத் தாங்கியே,
தந்ததது என்னை அன்னையே... !"
-- என்று தொடங்கி,
"கூழொக்கும் தந்தை விந்தில் குறுகுறு வெனவே நீந்தி...
வாலுள்ளஅணுக்களுள்ஒன்று வந்ததாயின்முட்டையை துளைக்க...
வாலிழந்து கைகால் முளைக்க வாழும்விதம் அங்கம் பிறக்க,
பால்சுரந்து (என்னைப்) பெற்றவள் தாயே... !"
-- என்று முடியும் கவிதைகளால் அறிவியல் ரீதியாக உறுதி
செய்யப்பட இயலும்.
Wills in Kavithai Chittu
Chennai
4/21/2012 11:17:45
அறிவியல் ஒரு
அரியும் வெங்காயம்!
மருந்தும் ஆகின்றது!
எரிச்சலும் தருகின்றது!
அறிவியல்...
சூரிய மண்டலம் கடந்து...
சுழலவும் செய்கின்றது!
பால்வெளி வீதிக்குள் நுழைந்து...
பயணமும் தொடர்கின்றது!
அதனால்...
உலகம் சுருங்குகின்றது!
பிற கிரகங்களின் இரகசியங்களைத்
தெரியவும் உதவுகின்றது!
ஆனால்...
அழிவைச் செய்திடும்
கலகக் காரர்களுக்கு –
வேட்டைநாயும்
ஆகின்றது!
Wills in Kavithai Chittu
Chennai
4/5/2012 16:19:57
இந்தப் பூவை யார் படைத்தது?
முகரமணம் இல்லை! முழுகத்தேன் இல்லை!
அகன்ற இதழ்கள், அசையஅரி இல்லை!
நிகழ மகரந்தச் சேர்க்கை!?
Wills in Kavithai Chittu
Chennai
5/10/2012 6:59:51
துணைவி...ஒருவர் மட்டும் போதுமே!
கஞ்சாப் போன்ற நஞ்சடா; காமப் பிழைகள்! அஞ்சடா;
எஞ்சா எதுவு உடலிலே, இன்பம் எய்ட்சில் முடியுமே!
பஞ்சாப் போகும் வாழ்க்கையே; பாவையர் பலரைக் கூடவே!
எண்சாண் உடலும், உறவுமே; இறந்துபட வேணுமோ?
தேடுவதும்; தேடுகிற பெண்களிடம் நாள்தோரும்,
கூடுவதும்; கூடக்கொடும் நோய்தாக்க நாள்தோரும்,
ஓடுவதும்; ஊசியேற்றி நோய்விலக மீண்டும்நோய்,
தேடுவதோ? தேக சுகம்!
எழ,உண்டதும் ஓர்ஆண் எடுத்தே எறிய,
விழக்கண்டு வீதியில்; வேறோராள் வந்தவ்
இலையைவிரித்(து) உண்ண; வெறுக்கும் மனிதா!
விலைமாதர் மேல்மோகம் வேண்டாம்.
எத்தனை குணமிருந்(து) என்ன பயனே!
அத்தனையும் வீணே! அரிக்கும்தூண் செல்லென,
நித்தமும் பலபெண்ணை நீதழுவ, அலைய...
பித்தனைப் போல்;நோயும் பின்வந்(து) அழிக்குமே!
சுற்றிச் சுற்றி சுற்றிச் சுற்றி சுற்றிவந்து பெண்களை,
வற்றி வற்றி வற்றி வற்றி வற்றித்தீர சுக்கிலம்;
பற்றிப் பற்றி பற்றிப் பற்றி பற்றிக்கவலை நோய்களே,
இற்று டல்கள் செத்தவர்கள் எண்ணுதற்(கு) இயலுமோ!
Wills in Kavithai Chittu
Chennai
4/26/2012 6:11:10
இருகன்னம் உன்னிடத்தில் இருப்பதால் வந்தெவனும்,
ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டிடு!
உரிய கூலியைத் தராது எவனும்
உழைத்திடும் உன்வயிற்றில் அடிக்கையில்…
இறைவன் தடுக்கமாட்டார்; நீசட்டப்படி அடி!
|
Sunday, 27 May 2012
Thanks: Dinakaran, the Tamil E-Mail News Paper...
Subscribe to:
Posts (Atom)