Saturday, 26 April 2014

என் கவிதைகள்... உன் கால்கொலுசு!

என் கவிதைகள் - உன்
கணுகால் கொலுசு!
முழுஅழகு முன்,
உலகமே தூசு!

ஏ! நிலவே!
இவள் -
முகஒளிப் பொழிவை,
உன் தேகத்தில் பூசு!

உனக்குள் தகிக்கும் சூடு!
தணியவில்லை
என்றால்...
நீ  என்னை ஏசு!

இவள் கால்...
கொலுசுப் பரல்கள்;
தமிழ் இசை வெண்பா...
இனிய சிதறல்கள்!

பெண்ணே! உன்
பார்வைக் கொறிப்புக்கள்,
அன்றாடம் புதுபுது தினுசு!
பதினெட்டு வயது,
வாலிபன் எவனும்;

தமிழ்நாட்டில்...
அவன்முன் நீ  சிரிக்க,
பார்த்தான் என்றால்;
உடன் ஆகிடுவான் தனுசு!





No comments:

Post a Comment