Thursday 24 April 2014

`காதல் இலக்கணம்' என் காதலி பெயர்!

இளமையில் நான் சிரித்தேன்!
வலது கரம்,
சிரசு முடியை, அவ்வப்போது...
வருடிற்று!
காலம்  என்னைத் தழுவி,
நழுவிற்று!

இன்று நான் முதுமையில்...
கண் பார்வை மங்கிற்று!
காது கேட்கவில்லை!

!  குறி, ? குறியை பரிகசித்தது; இவருக்குப் பெயர்...
வளையாபதி!

எப்போதும் நிமிர்ந்தே,
இருந்த என் -
முதுகைக் கவனித்த;
? குறி, ஆச்சரியம்...
உற்றது!

வழக்கம் மறவா வலது கரம்;
தலை முடியை வருட,
முற்பட,
விரல்கள் தடுமாறும்;
நிலை உற்றது!

கடவுள் தந்த வரம்,
என்பதாக நம்பிட்ட...

அழகு  ஆடை அவிழ்ப்பு,
இளமைக் கொழுப்பு;
முழுவதுமாய் கரைந்து ...
தலை முடியும், நரைத்திட்டது!

`காதல் இலக்கணம்'
என் காதலி பெயர்!
எங்கே என்று அறிய,
மனம் தத்தளிக்கின்றது தினம்!

கண்ணீர் திரள்கின்றது!
தேகம் எங்கும் காய்ச்சல்,
புரள்கின்றது!

காலம் சிரித்திட்டது!
தேதியை...
தேர்வுச் செய்ய,
வெறுப்போடு நகர்ந்திட்டது!

கடவுள் இல்லவே இல்லை!
அவனேப் படைதிட்டதாக,
புலம்பிடும்  இந்த,
உடம்புக்குள்...
நோயும் நுழைகின்றது!

காதலி முகம், காணாமல்,
ஒவ்வொருநாளும்...
மரணமும்  நிகழ்கின்றது!

No comments:

Post a Comment