பிரம்மன் கதையெனவே,
உன்காதல் கற்பனைகள்;
உச்சியைத் தொடுவதற்கு,
மேலே மேலே பறந்தேன்!
பிரபஞ்சம் கடந்தும்,
உச்சத்தைக் காண்கிலேனே!
இரவெல்லாம் உறக்கம் இல்லாமல்,
ஏக்கத்தில் தவிக்கின்றேனே!
சிவனின் கதையெனவே,
உன்காதல் விளையாடல்;
அடிமடி முடிவு,
அறிந்திடாதபடி;
பிரபஞ்சம்,
தாண்டிப் பெரிதாக...
பெருமாள் கதையெனவே,
உன்னுள் புதைந்தேன் சென்றேன்;
உன்நினைவுகள்,
ஆழம்தரை அறிகிலேனே
No comments:
Post a Comment