அவன்:
அமிழ்தசுனை அலைச்சுழல்போல் சுழல்குழியாய் நெழிந்திடுதே! - அட!
திமிர்த்தனமாய்ச் சுழன்றஎழில் சிறுநாபி எனமாறிட்டதே!
கார்முகில்கள் மயங்கியிவள் கவிதைக்குழல் ஆயிற்றே! - அந்தக் கூர்ப்பிறையும் இவள்நெற்றியைத் தன்அசலென்றே [இக்]
குமரிமுகம் நோக்கிடுமே?
சரிந்துமது தெளிக்கும்கிண்ணம் பருவம்கண்டு தழும்பிடுதே! - தென்றல் விரிந்துதழுவ காதல்மூச்சு வெளிக்கிளம்பிக் கனலாகிடுதே! அரிந்துவைத்த மாவடுபோல் அழகுநுதல் ஈர்த்திடுதே!
தெரிந்(து)வைத்த முத்தாரப்பல் தேன்இதழ்கள் திறந்திடுமோ?
நாணம், நழுவிடுமோ? நிலவு தழுவிடுமோ? முகிலை!
வானம், முனகிடுமோ? மழையைச் சிதறிடுமோ? புவியின்...
மேனி, சிலிர்த்திடுமோ? மெளன நதிநெகிழ - நெருங்கி
வாநீ எனகாற்று, இப்பெண் மதுஇதழை மெதுவாய் வருடிடுமோ?
To go Page -
1,
|
No comments:
Post a Comment