Tuesday 18 September 2012

எனக்காக ஒரு கவிதைப் படியுங்களேன்!




WILLS IN KAVITHAI CHITTU

அவன்:


ஓடமே இல்லை; நீரோட்டம் இல்லையேல் எந்நதியும் மணல்திட்டு!

மணமே இல்லை; காகிதப்பூ அழகு... மகளிர்க்கு, சருகு!

மேகமே இல்லை; மழையில்லையோ, விண்ணும், வீண்!

தாபமே இல்லை; தவிக்கவிடும் பாசமும் தனிமையும் நெரிஞ்சில்!


நிலைஎனப் பறைவதே பிழை! நினைப்பதும் மறப்பதும் தோழ்வி!

ஒட்டுதலே இல்லை; ஊடலும் நாடலும் தேடலும் பிசுபிசுப்பு!

மதபேத ஓதல்முன், காதல் நரபலி! கல்யாணம் கற்பழிப்பு விழா!

ஒன்றுதலே இல்லை; ஒழி, மதநம்பிக்கையும் சகாரா!


மனிதமே இல்லை; மதவிழா ஆர்ப்பாட்டங்களும் மனநோய் புதர்!

சமத்துவமே இல்லை; கடவுள் நம்பிக்கையும் இடர்!

பேத ஒழிப்புக்கு இல்லை; காணும்எந்தக் கட்சியும் பதர்!

பேதமே அடிப்படை; இட ஒதுக்கீடும், வேற்றுமைக்கே... வேலி!


அவள்:

நாட்டுப் பற்றுக்கு இது போதும்; எனக்காக ஒரு கவிதைப் படியுங்களேன்.

அவன்:


அன்பே! அணைஎன்றே ஆசையுடன் நோக்கிக்கரு

வண்டை அழைக்கும்கொடி மயங்கிப்பூ விரிப்பதுபோல்...

கண்டு தன்னைக் காதலித்து மகிழென்று நொடிக்குநொடி,

சுண்டி இழுத்(து) என்னைத் தோண்டுதே! உன்பார்வை!


அவள்:

அம்ம! எனக்கு இது அதிகம்; எது முதலில்... முட்டையா, கோழியா?


அவன்:

('எது முதலில்' தகவல் அறியப்பட -
சொடுக்கு: படவரிசை 14/09/2012 > படவரிசை வலைத் தளத்தின் முடிவு எல்லைக்கு செல்க > திற - Comments > Read the verses issued by Willswords M (Google).

Click:
மேலும் கதைகட்கு
< சொடுக்கு >

No comments:

Post a Comment