கவிதைகள்
< comments >
என் - இடதுபுறத்து இருதயமே!
சூரியனில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால், காந்தப் புயல்கள்... உருவாகின்றனவாம்! நம் பெற்றோர் இதயங்களுக்குள் தொற்றிட்ட... மத வேற்றுமை மனநோய்... மோதல் புயல்களாகி, நம்மைப் பிரிக்க... முற்படுகின்றனவே! என் காதல் இலக்கியத்தின் கரு மையமே! சூரியனின் மேற்பகுதி கொந்தளிப்பாகக் காணப்படுகிறதாம்! சில நேரங்களில், வெப்பத்தால் – பிய்த்துக்கொண்டு... காந்தப் புயல், வெளியேறுகிறதாம்! உன்னிடம்... கொந்தளிப்பான பகுதி, எது என்று தெரியாமல்... என் தலையை அல்லவோ, நான் பிய்த்துக்கொண்டு... உன் நினைவுகளால்... வெளிப்படும், கனவுகளில்... உனக்கு – உருசி அறியும் கயலாக, நான் மாற... எனக்கு, அசீரணமாகிறதே! சூரியனிலிருந்து புறப்படும் காந்தப் புயல்... பூமியை நோக்கியே, பாய்கின்றது! நம் காதல் வயலோ... உன்னிடமே... அசைந்தபடி, என்னை அடைய விடுப்படாமல்... அழகு காட்டுகின்றதே! சூரியகாந்தப் புயலால்... விமானப் போக்குவரத்து, மின்சாரம், செயற்கைக் கோள்... பாதிக்கப்படலாம் என்று விஞ்ஞானிகளால் அஞ்சப்படுகிறதாம்! விடை அறியப்படாத, நம் காதல் – பருவ கால நிலவரம், மோசமாக எச்சரிக்கின்றது! குளுமை, இளமை, வளமை, ஆயுள்,,, பாதிக்கப்படக் கூடும்! சூரியனில் இருந்து பூமியை நோக்கி அவ்வ்போது ஒளி... பிரகாசமாகி அதிவேகமாக, புறப்படுகிறதாம்! என்றாலும், உன்னிலிருந்து சுரக்கும்…
காதல் ஒளிப் பிரவாகம் முன், சூரிய காந்த ஒளி …பிரகாசத்தை வலிய இழந்து விடும்!
,
சூரிய காந்தப் புயலால் பூமிக்கு... எந்தவோர் ஆபத்தும், இதுவரை... நிகழ்ந்திடவில்லை!
ஆனால்... நம் காதலுக்குள் வீசும் மத வேற்றுமைப் புயலால் உன்னைச் சேராமலேயே.... நான் இறந்துபடுவேனே? |
< சொடுக்கு >
(Seen above)
<மேலும் கவிதைகட்கு>
கூடுதலாக:
(Wills in Kavithai Chittu on other Web Blogs/Sites)
A Comment by -
Willswords M.on Sep 04, 2012 at Tamil Movie News
[The Hagley's]
< கதைகட்கு>
< சொடுக்குக >
|
Sunday, 9 September 2012
கவிதைகள் வரிசையில் < Wills in Kavithai Chittu >
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment