பின்னிரவில் கண்விழித்துப் பேணிச் சுறுசுறுப்பை (மணி)
பன்னிரெண்டும் தாண்டி பகல்மூன்றில் ஓயும்நம்
பெண்ணேபோல் விண்ணில், பிறைநிலவும் தேய்கிற(து)ஏன்?
என்போல் தமிழ்சுவைக்கும் ஏக்கம்!
அழகாய் சிரிக்கும் அனைத்தும் உறங்க,
விழியேன் என்றே விடியல் குளிராய்,
இளமை அணையேன்; எழேன்நான் தமிழாய்,
விழிவழி பேசு விழிப்பேன்!
உலாவும் உலகும் உருளும் கதிரோன்,
நிலாவும் உராயும் நெழிமுகில் வானும்,
துளாவி மயங்கும் சுவைஎஃதாம்? வாழை,
பலாமாவும் பாடும் தமிழே!
மலரும் கொடியும் மணமும் முயங்க,
நிலவும் ஒளிர நிலமும் குளிர,
களத்துள் முனகிடும் காதலர் அன்ன,
குலவும் குயில்கள் குரலும் தமிழே!
சிரிக்கும் இயற்கைத் திறக்கும் மொழியும்,
தெரிக்கத் தமிழை; தினமும் மதுவைச்
சுரக்கும் மலர்மேல் சுழல இசையை,
விரிக்கும் அரியும்... வியக்கும்!
கமழும் மணத்தை கனியும் வனங்கள்,
உமிழும் மலராய் உதிர்க்கும் கொடிமேல்,
அமிழ்தைப் பருக அமரும்பொன் வண்டும், தமிழ்தான் இளமையெனத் தாவும்!
News Paper
சேமிப்பில் Google+ இல் 3) Go, Click: 'COMMENTS'
பகிரப்பட்டது. 4) Read the VERSES (i.e., the Comments)
|
Sunday, 16 September 2012
களத்துள் முனகிடும் காதலர் அன்ன...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment